Skip to main content

2024 நாடாளுமன்ற தேர்தல்; உ.பியில் திரிணாமூல் காங்கிரஸ் போட்டியிடும் - மம்தா பானர்ஜி அதிரடி!

Published on 02/02/2022 | Edited on 02/02/2022

 

MAMATA BANERJEE

 

திரிணாமூல் காங்கிரஸ் கட்சியில் உட்கட்சி தேர்தல் நடத்தப்பட்ட நிலையில், அக்கட்சியின் தலைவராக மம்தா பானர்ஜி இன்று போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார். இதனைத்தொடர்ந்து பேசிய மம்தா பானர்ஜி, பாஜகவே தங்களின் முக்கிய எதிரி எனth தெரிவித்துள்ளார்.

 

இது தொடர்பாக மம்தா பானர்ஜி கூறியதாவது; 2024-ல் பாஜகவை ஆட்சியில் இருந்து அகற்ற வேண்டும் என்பதால், கட்சியை வலுப்படுத்துமாறு கட்சித் தொண்டர்களையும், தலைவர்களையும் கேட்டுக் கொள்கிறேன். 34 ஆண்டுகாலம் ஆட்சியில் இருந்த மார்க்சிஸ்ட் கம்ம்யூனிஸ்ட் கட்சியை மேற்கு வங்கத்தில் இருந்து வெளியேற்ற முடியுமென்றால், நிச்சயம் பாஜகவையும் நாட்டிலிருந்து அகற்ற முடியும். அவர்கள் நமது முக்கிய எதிரிகள்.

 

மேகாலயா மற்றும் சண்டிகரில் பாஜகவுக்கு ஆதரவாக காங்கிரஸ் தேர்தலில் போட்டியிடுவதைப் பார்க்கும்போது வருத்தமாக இருக்கிறது. பாஜகவுக்கு எதிரான அனைத்து கூட்டங்களும் ஒன்று சேர வேண்டும் என நாங்கள் விரும்புகிறோம். ஆனால் யாராவது வேறுவிதமாக நினைத்துக்கொண்டு, கர்வத்துடன் இருந்தால், நம் நமது பாதையைத் தேர்ந்தெடுக்கவேண்டியதுதான். பாஜகவை தோற்கடிக்க பிராந்திய கட்சிகள் ஒன்றிணைய வேண்டும்.

 

உத்தரபிரதேசத்தில் இருந்து காங்கிரசும், குஜராத்தில் இருந்து பாஜகவும் தேசிய கட்சியாக உருவெடுத்தது போல், மேற்கு வங்கத்தில் இருந்து  திரிணாமூல் காங்கிரஸ் தேசிய கட்சியாக உருவெடுத்துள்ளது. உத்தரப் பிரதேசத்தில் சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை, ஆனால் சமாஜ்வாடி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவை ஆதரிக்கப் போகிறேன். 2024 மக்களவை தேர்தலில் உத்தரப்பிரதேசத்தில் இருந்து போட்டியிடுவோம். கோவாவில் நமது கட்சியை உருவாக்கியுள்ளேன், திரிபுராவில் நமது வாக்கு சதவீதம் 20%க்கு மேல் உள்ளது. அடுத்த 2 ஆண்டுகளில் வங்கத்தை வலிமையாக்க வேண்டும், அதன்மூலம்(2024 மக்களவைத் தேர்தலில்)  42 இடங்களையும் பெறுவோம். பாஜகவை விரட்டியடிக்க வேண்டும்.

 

மேற்குவங்க சட்டமன்ற தேர்தலின்போது, பிரதமர் மோடியின் விமர்சனத்திற்கு பதிலளித்த திரிணாமூல் காங்கிரஸ், "2024-ல் பாதுகாப்பான தொகுதியை பார்த்துக்கொள்ளுங்கள். வாரணாசியில் உங்களுக்கு சவாலளிக்கப்படும்" தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்தது. இது மம்தா, மோடியை எதிர்த்து களமிறங்குவாரா என்ற எதிர்பார்ப்பை கிளப்பியது. அதேபோல் திரிணாமூல் காங்கிரஸை சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் மஹுவா மொய்த்ரா தனது ட்விட்டர் பக்கத்தில், "இன்னொரு தொகுதியிலிருந்து போட்டியா?" என பிரதமர் மோடி மம்தா பானர்ஜியை தாக்கியுள்ளார். ஆமாம் பிரதமரே. இன்னொரு தொகுதியிலிருந்து போட்டியிடுவார். அது வாரணாசி. எனவே உங்கள் கவசத்தை தயார்செய்து கொள்ளுங்கள்" எனக் கூறினார்.

 

இது எதிர்பார்ப்பை அதிகப்படுத்திய நிலையில், "2024 தேர்தலுக்கான கவுன்டவுன் ஏற்கனவே தொடங்கிவிட்டது. வாரணாசியில் மோடி கடுமையான சவாலை எதிர்கொள்வார். வாரணாசியில் மோடிக்கு எதிராக மம்தா களமிறங்குவாரா என்பது குறித்து கட்சியும், கட்சித் தலைவரும் பின்னர் முடிவெடுப்பர்" என திரிணாமூல் கட்சியின் செய்தித்தொடர்பாளர் எதிர்பார்ப்புகளுக்கு தற்காலிக முற்றுப்புள்ளி வைத்தார். இந்தசூழலில் மம்தா திரிணாமூல் காங்கிரஸ் உத்தரப்பிரதேசத்திலிருந்து போட்டியிடும் என அறிவித்துள்ளது கவனிக்கத்தக்கது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'100 நாள் வேலை ஊதியம்' - மத்திய அரசு வெளியிட்ட திடீர் அரசாணை

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
'100 days of work wages'- Sudden decree issued by the central government

100 நாள் வேலை ஊதியத்தை உயர்த்தி மத்திய அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 100 நாள் வேலைவாய்ப்பு திட்டத்தின் ஊதியத்தை 319 ரூபாயாக உயர்த்தி ஒன்றிய அரசு அரசாணை பிறப்பித்துள்ளது.

தற்பொழுது தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருப்பதால் தேர்தல் ஆணையத்தின் அனுமதியைப் பெற்று இந்த அரசாணை வெளியிடப்பட்டுள்ளதாக ஒன்றிய அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மாநிலம் வாரியாக 100 நாள் வேலைத் திட்டத்திற்கான ஊதியத்தை ஏற்கனவே அதிகரித்து மத்திய அரசு அறிவித்து வெளியிட்டிருந்த நிலையில் இதற்கான அரசாணை தற்போது வெளியிட்டுள்ளது.

அண்மையில் மகளிர் தினத்தின் போது சமையல் சிலிண்டர் விலை குறைப்பு நடவடிக்கையில் ஒன்றிய அரசு  ஈடுபட்ட நிலையில், தேர்தல் நேரத்தில் பாஜக அரசு வாக்குகளைப் பெற இதுபோன்ற சலுகைகளை அறிவிப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வந்தன. இந்நிலையில் தற்போது தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பின்னர் 100 நாள் வேலையின் ஊதியத்தை உயர்த்தி மத்திய அரசு வழங்கியுள்ளதையும் எதிர்க்கட்சிகள் விமர்சித்து வருகின்றன.

Next Story

நான் என்ன பாகிஸ்தான் குடிமகனா? - துரை வைகோ ஆவேசம்!

Published on 27/03/2024 | Edited on 27/03/2024
 Am I a citizen of Pakistan? - Durai vaiko 

திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் ம.தி.மு.க. திருச்சி தொகுதியில் போட்டியிட இருக்கிறது. சொந்த சின்னத்தில் மட்டுமே மதிமுக போட்டியிடும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், பம்பரம் சின்னத்தை  தங்களுக்கு ஒதுக்க வேண்டும் என ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ சார்பில் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கில் அவசர முறையீடு செய்யப்பட்ட நிலையில், நேற்று இந்த வழக்கு தலைமை நீதிபதி கங்கா பூர்வாலா அமர்வில் விசாரணைக்கு வந்தது. 

வைகோ தரப்பில், 'தங்களுடைய கோரிக்கையை ஏற்றுக் கட்சி நிர்வாகிகளின் பெயர்களை இணையதளத்தில் பதிவேற்றம் செய்து தேர்தல் ஆணையம் பம்பரம் சின்னம் ஒதுக்கீடு செய்யவில்லை. நாளை கடைசி நாள் என்பதால் தாங்கள் கோரிக்கையை உடனடியாக பரிசீலிக்க வேண்டும் எனத் தேர்தல் ஆணையத்திற்கு நீதிமன்றம் உத்தரவிட விட வேண்டும்' என வாதிடப்பட்டது. இதற்குப் பதிலளித்த தேர்தல் ஆணைய தரப்பு வழக்கறிஞர், 'சட்டப்படி அங்கீகரிக்கப்படாத பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சி இரண்டு தொகுதிகளுக்கு மேல் போட்டியிட்டால் தான் ஒரே சின்னம் ஒதுக்கப்படும். மதிமுக கோரிக்கை மீது இன்று முடிவு எடுக்கப்படும். இது குறித்து சம்பந்தப்பட்ட பகுதியின் தேர்தல் அதிகாரி தான் முடிவு எடுப்பார்' என்று தெரிவிக்கப்பட்டது. பம்பரம் சின்னம் தற்போது பொது சின்ன பட்டியலில் உள்ளதா இல்லையா என்பது குறித்து தேர்தல் ஆணையம் விளக்கமளிக்க வேண்டும் என உத்தரவிட்ட நீதிபதிகள், வழக்கை  ஒத்திவைத்தனர். மேலும், மதிமுகவுக்கு பம்பரம் சின்னம் கோரிய மனு மீது புதன் கிழமை காலை 9 மணிக்குள் முடிவெடுக்க வேண்டுமென தேர்தல் ஆணையத்துக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த நிலையில்.. “இரண்டு தொகுதியில் போட்டியிட்டால் மட்டுமே பம்பரம் சின்னம் ஒதுக்க முடியும். ஒரு தொகுதியில் போட்டியிட்டால் ஒதுக்க முடியாது” என்று தேர்தல் ஆணையம் மறுப்பு தெரிவித்து மதிமுகவுக்கு தகவல் அனுப்பியுள்ளது. இது மதிமுக தொண்டர்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. 

மேலும், 14 ஆண்டுகளுக்கு முன்பு அங்கீகாரம் ரத்து செய்யப்பட்ட நிலையில் மதிமுகவுக்கு சின்னம் ஒதுக்கீடு செய்வது தொடர்பாக சம்பந்தப்பட்ட தொகுதியின் தேர்தல் அதிகாரி தான் முடிவு எடுப்பார் என்றும் தேர்தல் ஆணையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. மேலும், பம்பரம் சின்னம் பொது சின்னமாகவோ, ஒதுக்கீட்டு சின்னமாகவோ வகைப்படுத்தப்படவில்லை எனச் சொல்லப்பட்டது. முன்னதாக, இன்று காலை திருச்சியில் செய்தியாளர்களைச் சந்தித்த ம.தி.மு.க. வேட்பாளர் துரை வைகோ, “பம்பரம் சின்னம் ஒதுக்க முடியாது என தேர்தல் ஆணையம் தான் கூறி உள்ளது. நீதிமன்றம் கூறவில்லை. நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை வரும்போது எங்கள் வழக்கறிஞர்கள் வாதத்தை முன்வைத்து பம்பரம் சின்னத்தை கேட்பார்கள். சின்னம் விவகாரத்தில் மக்கள் தெளிவாக இருக்கிறார்கள். வேட்பாளர் நல்ல வேட்பாளர் என்றால் அவரின் சின்னம் என்ன என்பதை தேடும் மக்கள் அதிகம் இருக்கிறார்கள். இன்றைய காலத்தில் சின்னத்தை மக்களிடம் கொண்டு சேர்க்க 24 மணி நேரம் கூட தேவைப்படாது. 

பா.ஜ.கவை உண்மையாக எதிர்க்கும் அணியாக தி.மு.க அணி இருக்கிறது. திருச்சியில் அந்த அணி சார்பில் ம.தி.மு.க போட்டியிடுகிறது. இது மக்களுக்கு நன்றாகவே தெரியும். வருமான வரித்துறை, அமலாக்கத்துறை, தேர்தல் ஆணையம் உள்ளிட்டவை பா.ஜ.கவிற்கு ஆதரவாக இருக்கிறது. தேர்தல் ஆணையம் கேட்ட ஆவணங்கள் கொடுத்துவிட்டோம். ஆனால் பம்பரம் சின்னம் ஒதுக்கவில்லை. ஒவ்வொரு முறையும் ஒவ்வொரு காரணத்தை கூறுகிறார்கள். ம.தி.மு.க, விசிக மட்டுமல்ல நாம் தமிழர் கட்சிக்கும் சின்னம் ஒதுக்கவில்லை. பா.ஜ.க.வை எதிர்க்கும் அரசியல் இயக்கங்கள் இருக்கக்கூடாது என்பதற்காக பா.ஜ.கவிற்கு ஆதரவாகத் தேர்தல் ஆணையம் செயல்படுகிறது. 

அதிமுகவினர் பதட்டத்தில் இருக்கிறார்கள். அவர்கள் சின்னமே முடங்க வாய்ப்பிருக்கிறது. கூட்டணிக்குள் குழப்பத்தை ஏற்படுத்தும் நோக்கில் முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் எனக்கு வாழ்த்து கூறுவதை போல் பேசியுள்ளார். எதிர்க்கட்சிகளை முடக்க நினைக்கும் பா.ஜ.கவிற்கு மக்கள் தக்க பாடம் புகட்டுவார்கள். ஒன்றிய பா.ஜ.க அரசு வருமான வரித்துறை, அமலாக்கத்துறை, தேர்தல் ஆணையம் உள்ளிட்டவற்றை கொண்டு ஏதாவது ஒரு விதத்தில் இடைஞ்சல் கொடுத்து வருகிறார்கள். என்னை வெளியூர் வேட்பாளர் என்கிறார்கள். நான் பாகிஸ்தானிலிருந்து வரவில்லை. தமிழ்நாட்டை சேர்ந்தவன் தான். திருச்சியில் பல்வேறு நிகழ்ச்சிகளில் தொடர்ந்து கலந்து கொண்டு வந்துள்ளேன்” என்றார்.  

1994ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட மதிமுக, 1996 ஆம் ஆண்டு முதல் சட்டமன்றத் தேர்தல், உள்ளாட்சி மற்றும் நாடாளுமன்றத் தேர்தல்களில் பம்பரம் சின்னத்தில் போட்டியிட்டது. கடந்த 2006ஆம் ஆண்டு நடந்த சட்டமன்றத் தேர்தலில் 6% வாக்குகள் மட்டுமே பெற்றதால் அந்த கட்சி அங்கீகாரம் இழந்தது குறிப்பிடத்தக்கது.