Advertisment

'திரும்ப வந்துட்டேன்னு சொல்லு... இந்த முறை மஞ்ச கலரு இல்ல பிங்க் கலரு..' வைரலாகும் அரசு அதிகாரி!

உத்தரப் பிரதேசத்தில் கடந்த மே மாதம் நடந்த லோக்சபா தேர்தலில், லக்னோவில் அமைந்திருந்த வாக்குச் சாவடிக்கு மஞ்சள் நிறத்தில் மாடர்னாக புடவை அணிந்துகொண்டு ஸ்டைலாகவும், கையில் தேர்தல் குறிப்புகள் அடங்கிய பெட்டி ஒன்றுடன் வந்து பணியாற்றியவர்ரீனா திவேதி என்ற அதிகாரி. உத்தரப் பிரதேச மாநிலத்தின் பொதுப்பணித்துறையில் இளநிலை உதவியாளராக பணிபுரியும் 35 வயதான ரீனா திவேதி இம்முறை பிங்க் நிற புடவை அணிந்துகொண்டு லக்னோவில் உள்ள கிருஷ்ணாநகர் இடைத்தேர்தல் நடக்கும் வாக்குச் சாவடிக்கு வந்து கலக்கியுள்ளார்.

Advertisment

fh

அரசு அதிகாரிகள் என்றால் இப்படித்தான் இருக்க வேண்டும் என்கிற டெம்பிளேட்டை உடைத்து இப்படி தோன்றுவதால் தான் நேர்மறையாகவும் எனர்ஜியுடனும் உணருவதாக ரீனா கூறியுள்ளார்.மேலும் கணவரை இழந்த ரீனா திவேதி, தனது 15 வயது மகன் பெரியஅரசு அதிகாரியாவதற்கான கனவுகளுடன் படித்து வருவதாகவும், அவனுக்கு உதவும் வகையில் வாழ்ந்து அவனது கனவை நிறைவேற்றுவதுதான் ஒரு அம்மாவாக தனது கடமை என்றும் பொறுப்புடன் பேசியுள்ளார். இவரை முகபுத்தகத்தில் 9 ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் பின்பற்றுகிறார்கள். டிக் டாக்கில் அம்மணி வெளியிட்டுள்ள வீடியோ இன்றளவும் வைரலாகி வருகிறது.

fghk

uttarpradesh
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe