Reels videotaping dispute; Womens fight in park

Advertisment

அண்மைக் காலமாகவே 'மாஸ், ரொமான்ஸ்,காமெடி என்ற பெயரில் இளைஞர்கள், பெண்கள் சிறுவர்கள், மாணவர்கள் என வயது பாரபட்சமின்றி ரீல்ஸ் வீடியோ வெளியிடுவது ட்ரெண்டாகி வருகிறது. சில நேரங்களில் ஆபத்தான முறைகளில்வாகனங்களில் செல்லும் போதும், நீர் நிலைகளின் அருகிலும்விபரீதம்அறியாமல்ரீல்ஸ் எடுக்க முயன்று உயிரிழப்பு வரை ஏற்படுகின்றசம்பவங்களும்அதிகம். இந்நிலையில் பார்க்கில் ரீல்ஸ் வீடியோ எடுக்க முயன்று குடுமிப்பிடி சண்டை போட்டுக்கொண்ட பெண்களால்கலவரமே வெடித்த சம்பவம் ஆந்திராவில்நிகழ்ந்துள்ளது.

ஆந்திர மாநிலம் குண்டூரில் புதிதாக நேற்று பூங்கா ஒன்று திறக்கப்பட்டது. இதனால் அந்த பூங்காவில் அதிகப்படியான கூட்டம் கூடியது. அப்பொழுது அந்த பகுதியில் ரீல்ஸ் வீடியோ எடுத்துக் கொண்டிருந்த இரண்டு தரப்பு பெண்களுக்கிடையே தகராறு ஏற்பட்டு வாக்குவாதமானது. இதில் ஒருவரை ஒருவர் குடுமியை பிடித்துக் கொண்டு கடுமையாக தாக்கிக் கொண்டனர். இதனால் ஏற்பட்ட பரபரப்பால்சற்று பதற்றம் நிலவியது. இந்த தாக்குதல் தொடர்பான வீடியோ காட்சிகள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.