Advertisment

செம்மரக் கட்டைகள் கடத்தல்; 19 தமிழர்கள் கைது

red wood issue for 19 Tamil people incident at andhra

ஆந்திராவில் செம்மரக் கட்டைகள் கடத்தியதாக 19 தமிழர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Advertisment

ஆந்திரா மாநிலம் கர்னூல், அன்னமையா ஆகிய இரு மாவட்டங்களில் உள்ள சேஷாசலம் வனப்பகுதியில் உள்ள 60 லட்சம் ரூபாய் மதிப்பிலான செம்மரக் கட்டைகள் கடத்திய புகாரின் பேரில் 19 தமிழர்கள் உட்பட 25 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் அவர்களிடம் இருந்த செம்மரக் கட்டைகளையும் பறிமுதல் செய்துள்ளனர்.

Advertisment

கைது செய்யப்பட்ட தமிழர்கள் 19 பேரும் சேலம், விழுப்புரம், வேலூர் மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் எனத்தகவல் வெளியாகியுள்ளது. செம்மரக் கட்டைகளை வெட்டப்பயன்படுத்தப்பட்ட ஆயுதங்கள், கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்ட லாரி, இருசக்கர வாகனங்களை செம்மரங்கள் தடுப்புப் பிரிவு போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.

Andhra police redwood Tirupati
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe