வங்கக் கடலில் உருவான ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாறியது. இந்த புயலுக்கு கஜா என்றும் பெயர் வைத்துள்ளனர். இந்த புயல் இன்னும் 2 அல்லது மூன்று நாட்களில் தமிழகம் நோக்கி நகர வாய்ப்பு உள்ளது என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. அடுத்த 3 நாட்களில் வட தமிழகம், தெற்கு ஆந்திராவை நோக்கி நகரும் என இந்திய வானிலை மையம் தெரிவித்திருந்தது.
இதனால் 100 கிமீ வரை பலத்த காற்று, கனமழை பெய்யக் கூடும் என்று இந்தியா வானிலை மையம் எச்சரித்தது. இதையடுத்து வரும் 14ம் தேதி மாலை முதல் தெற்கு ஆந்திரா- வடதமிழகத்திற்கு இடையே, இந்த கஜா புயல் கரையை கடக்கும் என தெரிவித்தது. இதனால் ஆந்திராவுக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், ஆந்திராவுக்கு விடுக்கப்பட்ட இந்த ரெட் அலர்ட் தற்போது வாபஸ் பெறப்பட்டது.