கேரளாவில் இரண்டு மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை கொடுக்கப்பட்டுள்ளது.
வெளியான அறிவிப்பின் படி கேரளாவின் கண்ணூர், காசர்கோடு மாவட்டங்களுக்கு மிக கன மழைக்கான ரெட் எச்சரிக்கை அலர்ட் கொடுக்கப்பட்டுள்ள நிலையில், அந்த மாவட்டங்களில் பள்ளி கல்லூரிகளுக்கு இரண்டு நாட்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல் திருச்சூர், இடுக்கி, பத்தினம்திட்டா, பாலக்காடு உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழைக்கான ஆரஞ்சு எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. வயநாடு, மலப்புரம், கோட்டயம், திருவனந்தபுரம், கொல்லம், ஆலப்புழா உள்ளிட்ட மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.