Advertisment

கோவாக்சின் தடுப்பூசியை அவசரகால தேவைக்கு பயன்படுத்த அரசுக்கு பரிந்துரை! 

corona

Advertisment

பாரத் பயோடெக் நிறுவனம் தயாரித்துள்ள கோவாக்சின்தடுப்பூசியை அவசரகால தேவைக்குப் பயன்படுத்தலாம் என அரசுக்கு நிபுணர் குழு பரிந்துரை செய்துள்ளது.

கரோனாவிற்குதடுப்புமருந்து கண்டுபிடிக்கும் முயற்சியில், பல்வேறு உலக நாடுகள் இறங்கி,தற்பொழுது கிட்டத்தட்ட தடுப்பூசிகள் பயன்பாட்டிற்குவரும் நிலையை எட்டியுள்ளது. இந்நிலையில், ஹைதராபாத்தைச் சேர்ந்த பாரத் பயோடெக் நிறுவனம், கரோனாதடுப்பிற்காக கோவாக்சின் தடுப்பூசியைக் கண்டுபிடித்துள்ளது. இந்த தடுப்பூசியை, இந்தியாவில் அவசரகால தேவைக்குப்பயன்படுத்த மருத்துவ நிபுணர் குழு பரிந்துரைத்துள்ளது.சீரம் இன்ஸ்டியூட் தயாரித்தகோவிட்சீல்ட்தடுப்பூசியை அவசர காலத் தேவைக்குப் பயன்படுத்த ஏற்கனவே அரசுக்குப் பரிந்துரை செய்யப்பட்டிருந்த நிலையில் தற்போது இரண்டாவது தடுப்பூசியானகோவாக்சின் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

Central Government corona virus hydrebad
இதையும் படியுங்கள்
Subscribe