உலக வர்த்தக அமைப்பு அனுமதி கொடுத்தால் உலகத்திற்கே உணவுப்பொருட்கள் வழங்க இந்தியா தயாராக இருப்பதாக அண்மையில் பிரதமர் மோடி தெரிவித்திருந்த நிலையில், பிரதமரின் கூற்றை வழிமொழிந்துள்ளார் மத்திய அமைச்சர் பியூஸ் கோயல்.
பாஜக தலைமையகத்தில் பத்திரிகையாளர்களைச் சந்தித்த மத்திய அமைச்சர் பியூஸ் கோயல், ''உலகளாவிய பொருளாதார நெருக்கடியால் கச்சா எண்ணெய் விலையும், ரஷ்யா-உக்ரைன் போரால் விலைவாசி உயர்வும் ஏற்பட்டுள்ளது. தானிய உற்பத்தி மூலமாக இந்தியா உணவுப்பொருள் ஏற்றுமதியை எதிர்நோக்கியுள்ளது. கடந்த சில வாரங்களில் மட்டும் 20 முதல் 30 லட்சம் டன்கள் வரை கோதுமை ஏற்றுமதி நடந்துள்ளது. பருப்பு வகைகளின் மீதான வரிகளைக் குறைத்து பணவீக்கத்தைக் குறைக்க அனைத்துவித நடவடிக்கைகளை எடுத்துவருகிறோம்'' எனத்தெரிவித்தார்.