இன்று நாடு முழுவதும் 7 மாநிலங்களில் உள்ள 51 தொகுதிகளில் ஐந்தாம் கட்ட மக்களவை தேர்தல் நடைபெற்று வருகிறது. இதில் உத்தரபிரதேசத்தில் உள்ள ஒரு தொகுதியில், குறிப்பிட்ட வாக்குச்சாவடியில் இன்று மறுதேர்தல் நடக்கிறது.

Advertisment

re election conducted in uttarpradesh after evm got disappeared

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="7632822833"

data-ad-format="auto"

data-full-width-responsive="true">

Advertisment

கடந்த ஏப்ரல் 29 ஆம் தேதி உத்தரப்பிரதேசத்தின் மகோபா தொகுதியில் உள்ள பந்தானா கிராமத்தின் உள்ள வாக்குச்சாவடி ஒன்றில், தேர்தல் நடைபெற்ற சில மணி நேரத்தில் ஈவிஎம் இயந்திரத்தின் கட்டுப்பாட்டு அலகு மாயமானது. இதனையடுத்து கிட்டத்தட்ட 15 மணி நேரம் கழித்து, மாயமான ஈவிஎம் இயந்திரத்தின் ஒரு பகுதியானது அங்குள்ள பேருந்து நிலையத்தில் இருந்து மீட்கப்பட்டது. இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்த விவகாரத்தில் தேர்தல் அதிகாரிகள் 4 பேர் மற்றும் 5 பாதுகாப்பு அதிகாரிகள் மீது குற்றச்சாட்டு பதிவு செய்யபட்டது. இந்நிலையில் குறிப்பிட்ட அந்த தொகுதியில் இன்று ஐந்தாம் கட்ட தேர்தலுடன் மறு வாக்குப்பதிவு நடைபெறுகிறது.