Advertisment

"சோ க்யூட். ஜஸ்ட் லவ் திஸ்" - மீராபாய் சானுவை கவர்ந்த சிறுமியின் வீடியோ!

Re-created girl ... Mirabai Sanu!

டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகள், கடந்த 23 ஆம் தேதி கோலாகலமான துவக்க விழாவுடன் தொடங்கிய நிலையில், சனிக்கிழமையன்று (24.07.2021) மகளிருக்கான 49 கிலோ எடைப்பிரிவு பளு தூக்கும் போட்டி நடைபெற்றது. இதில் சீனாவைச் சேர்ந்த ஜிஹுய் ஹூ தங்கம் வென்றார்.

Advertisment

இப்போட்டியில் இந்திய வீராங்கனை மீராபாய் சானு, வெள்ளிப்பதக்கம் வென்று வரலாறு படைத்தார். ஒலிம்பிக் வரலாற்றில் பளு தூக்குதலில் இதுவரை இரண்டு முறை இந்தியா பதக்கம் வென்றுள்ளது. 2000 ஆம் ஆண்டு கர்ணம் மல்லேஸ்வரி சிட்னியில் நடைபெற்ற ஒலிம்பிக்கில் பளு தூக்குதலில் வெண்கல பதக்கம் வென்ற நிலையில், அதற்கடுத்து மீராபாய் பளு தூக்குதலில் வெள்ளிப் பதக்கம் வென்றுள்ளார். ஒலிம்பிக்கில் வெள்ளி வென்று சாதனை புரிந்த மீராபாய் சானுவிற்கு, பிரதமர் மோடி உட்பட பல்வேறு அரசியல் தலைவர்கள், விளையாட்டு வீரர்கள் என பல்வேறு தரப்பினரிடமிருந்து வாழ்த்துகள் குவிந்து வருகிறது.

Advertisment

mira

2021 ஆம் ஆண்டிற்கான ஒலிம்பிக் போட்டியில் முதல் பதக்கத்தை வென்று மற்ற வீரர்களுக்கு உத்வேகம் அளித்த மீராபாய்க்கு பல்வேறு தரப்பிலிருந்தும் பாராட்டுக்கள் குவிந்து வரும் நிலையில், மீராபாய் பளு தூக்கிய வீடியோவை சிறுமி ஒருவர் அப்படியே மறுஉருவாக்கம் செய்துள்ளார். ஒலிம்பிக் மேடையில் அவர் எப்படி பளு தூக்கினாரோ அதேபோல் பளு தூக்குவதுபோல் சிறுமி ஒருவர் வீடியோ வெளியிட்டுள்ளார். இந்த வீடியோவை பார்த்து ரசித்த மீராபாய், அந்த வீடியோவை 'சோ க்யூட். ஜஸ்ட் லவ் திஸ்.' எனக் குறிப்பிட்டு அவரது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

video India olympics
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe