RCB rally stampede incident - Tiruppur woman lose their live

இந்த ஆண்டுக்கான 18வது சீசன் ஐ.பி.எல். தொடரின் இறுதி போட்டி அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நேற்று முன்தினம் (03-06-25) இரவு நடைபெற்றது. இதில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு - பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதின. இதில் 18 ஆண்டு கால கனவை ஆர்.சி.பி வென்று நனவாக்கியது. ஆர்.சி.பி அணியை வரவேற்க பெங்களூருவில்ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த கொண்டாட்டத்தின் போது ஆர்.சி.பி அணி வீரர்கள் வெற்றி பேரணி நடைபெற இருந்தது. அதன்படி, அகமதாபாத்தில் இருந்து விமானம் மூலம் நேற்று ஆர்சிபி வீரர்கள் பெங்களூரு வந்தனர். அப்போது கர்நாடகா துணை முதல்வர் டி.கே.சிவக்குமார் அவர்களுக்கு பூங்கொடுத்து வரவேற்றார்.

Advertisment

இதற்கிடையில், ஆர்சிபி வெற்றி பேரணியை காண்பதற்காக ஆயிரக்கணக்கான ரசிகர்கள் நேற்று காலை முதல் பெங்களூரு சின்னசாமி மைதானத்திற்கு திரண்டனர். மைதானத்தின் வாசல் அருகே ஏராளமானோர் திரண்டதால் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இந்த கூட்ட நெரிசலில், ஆண்கள் பெண்கள் என 11 பேர் சிக்கி பரிதாபமாக உயிரிழந்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. மேலும், 50க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். காயமடைந்த ரசிகர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதில் 10 பேர் கவலைக்கிடமாக இருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது. பெங்களூரு அணியை வரவேற்க ரசிகர்கள் திரண்டதால் கூட்ட நெரிசலில் 11 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Advertisment

இந்நிலையில் பெங்களூரில் ஐபிஎல் பேரணி கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் 11 பேரில் திருப்பூரைச் சேர்ந்த இளம்பெண் ஒருவரும் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. உடுமலையைச் சேர்ந்த காமாட்சிபேரணியில் கலந்து கொண்ட நிலையில் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்துள்ளதாக தற்பொழுது முதற்கட்ட தகவல்கள் வெளியாகி இருக்கிறது.