Advertisment

தங்க நகைகளை அடகு வைப்பதற்கு புதிய விதிமுறைகள்; ரிசர்வ் வங்கியின் அதிரடி அறிவிப்பு

RBI's announcement on New rules for pawning gold jewellery

Advertisment

வங்கிகள் மற்றும் வங்கியல்லா நிதி நிறுவனங்களும் ஒரே மாதிரியான நடவடிக்கைகளை மேற்கொள்ள இது நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

இது குறித்து ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளதாவது, ‘தங்க நகையின் மதிப்பில் 75% தொகை மட்டுமே கடன் வழங்கப்படும், அடமானம் வைக்கப்படும் நகைகளுக்கு உரிய ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும், வங்கிகள் (அ) வங்கியல்லா நிதி நிறுவனங்கள் தங்கத்திற்கான தூய்மை சான்றிதழை வழங்க வேண்டும்,தங்க ஆபரணங்கள் மற்றும் வங்கிகளில் வாங்கிய தங்க நாணயங்களுக்கு மட்டுமே கடன் பெற முடியும் எனத் தெரிவித்துள்ளது.

மேலும் அதில் தெரிவித்துள்ளதாவது, ‘வெள்ளிப் பொருட்களுக்கும் கடன் வழங்க ரிசர்வ் வங்கி அனுமதி, ஒரு கிலோவுக்கு குறைவாக உள்ள நகைகளுக்கு மட்டுமே கடன் வழங்க அனுமதி,அடகு வைக்கப்படும் நகைகள் 22 காரட் தங்கத்தின் விலையில் மட்டுமே மதிப்பிடப்படும், கடன் ஒப்பந்தத்தில் முழுமையான விவரங்கள் இருக்க வேண்டும், அடகு வைக்கப்பட்ட தங்கத்திற்கான முழு தொகையையும் வாடிக்கையாளர்கள் செலுத்திய 7 நாட்களுக்குள் நகைகளை திருப்பித் தரவேண்டும்,தாமதம் ஆகும் ஒவ்வொரு நாளுக்கும் வாடிக்கையாளர்களுக்கு கடன் வழங்குபவர்கள் 5 ஆயிரம் ரூபாய் செலுத்த வேண்டும்’ எனத் தெரிவித்துள்ளது.

pawn gold RESERVE BANK OF INDIA
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe