Advertisment

இரண்டு கூட்டங்களில் இரண்டு முறை குறைந்த ரிசர்வ் வங்கியின் வட்டி விகிதம்...!

வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி வழங்கும் குறுகிய கால கடன்களுக்கான வட்டி விகிதம் தற்போது மீண்டும் கால் சதவீதம் குறைக்கப்பட்டுள்ளது.

Advertisment

rbi

மும்பையி‌ல் நடைபெற்ற ரிசர்வ் வ‌ங்கி நிதிக்கொள்கை ஆய்வுக் கூட்ட முடிவில் வட்டிக்குறைப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. தற்போது வங்கிகளுக்கு அளிக்கும் கடனுக்கு ரிசர்வ் வங்கியின் ரெப்போ வட்டி விகிதம் ‌கடந்த பிப்ரவரி மாதம் கால் சதவீதம் குறைத்து 6.25 சதவீதமாக நிர்ணயக்கப்பட்டது. இந்த நிலையில் தற்போது மீண்டும் கால் சதவீதம் குறைக்கப்பட்டுள்ளதால் அது 6 சதவீதமாக குறைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 2 மாதங்களில் மீண்டும் ரெப்போ வட்டி விகிதம் கால் சதவீதம் குறைக்கப்பட்டிருக்கிறது. ரிசர்வ் வங்கியின் ஆளுநராக சக்தி காந்ததாஸ் பொறுப்பேற்ற பிறகு இரண்டு கூட்டத்திலும் வட்டி விகிதங்கள் குறைக்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

RBI repo
இதையும் படியுங்கள்
Subscribe