Advertisment

கிரிப்டோகரன்சி -  கவலை தெரிவிக்கும் ரிசர்வ் வங்கி ஆளுநர்!

RBI GOVERNOR

2018ஆம் ஆண்டில்கிரிப்டோகரன்சி முதலீடு மற்றும் பயன்பாட்டை தடை செய்யும் வகையில் ரிசர்வ் வங்கி பிறப்பித்த உத்தரவை, கடந்த ஆண்டு உச்ச நீதிமன்றம் இரத்துசெய்தது. அதன்தொடர்ச்சியாகபிட்காயின் உள்ளிட்ட கிரிப்டோகரன்சிகளில்இந்தியர்கள் அதிக அளவு ஆர்வம் காட்டிவருகின்றனர்.

Advertisment

தற்போதுவரை 105 மில்லியன் இந்தியர்கள், அதாவது இந்திய மக்கள் தொகையில் 7.9 சதவீதம் பேர் இந்திய பணப்பரிமாற்றம் மூலமாக கிரிப்டோகரன்சிகளில்முதலீடு செய்துள்ளனர். இந்தநிலையில், ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்தி காந்த தாஸ்கவலை தெரிவித்துள்ளார்.

Advertisment

இதுதொடர்பாகஅவர்,மேக்ரோ பொருளாதாரம் மற்றும் நிதி நிலைத்தன்மை ஆகியவற்றின் கண்ணோட்டத்தில் கிரிப்டோகரன்சி தீவிரமான கவலையாக உள்ளது என தெரிவித்துள்ளார். மேலும், கிரிப்டோகரன்சி குறித்து மத்திய அரசுக்குப் பரிந்துரைகளை செய்துள்ளதாகவும், அதனைமத்திய அரசு பரிசீலித்துவருவதாகவும் சக்தி காந்த தாஸ் தெரிவித்துள்ளார்.

கிரிப்டோகரன்சி தொடர்பாக இதுவரை சட்டம் இயற்றப்படாத நிலையில், மத்திய அரசு விரைவில் கிரிப்டோகரன்சி வர்த்தகம் மீது கடுமையான கட்டுப்பாடுகளை விதிக்கவுள்ளதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

BITCOIN crypto currency RBI Governor Shaktikanta Das
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe