Published on 04/09/2018 | Edited on 04/09/2018

ஆர்.பி.ஐ.யின் ஆண்டு அறிக்கையின்படி, 30 ஜூன் 2018 வரை 566.23 டன் தங்கம் கையிருப்பு இருப்பதாகவும், மேலும் கடந்த ஆண்டு 2017 ஜூன் 30 வரை 557.77 டன் தங்கம் இருந்ததாகவும் தெரிவித்துள்ளது. கடந்த ஆண்டை ஒப்பிடுகையில் இந்த ஆண்டு 8.46 டன் தங்கம் கூடுதலாக வாங்கப்பட்டுள்ளது என்று சமீபத்தில் வெளியான ஆர்.பி.ஐ.யின் ஆண்டு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒன்பது ஆண்டுகளில் இதுவரை இல்லாத அளவில் 8.46 டன் தங்கத்தை வாங்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.