rats nibbled body in indore hospital

கரோனாவால் இறந்த முதியவரின் உடலை எலிகள் சிதைத்த அவலம் மத்தியப்பிரதேச மருத்துவமனையில் அரங்கேறியுள்ளது.

Advertisment

மத்தியப்பிரதேச மாநிலம் இந்தூரில் அரசு சார்பில் கரோனா மருத்துவமனை ஒன்று செயல்பட்டு வருகிறது. இங்கு கரோனா பாதிக்கப்பட்ட 87 வயது முதியவர் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இதனால் அவரது உடல் சவக்கிடங்கில் வைக்கப்பட்டுள்ளது. நான்கு மணிநேரம் கழித்து அவரது உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. அப்போது அவரது உடலில் கண், கால், காது, உள்ளிட்ட பகுதிகள் சிதைக்கப்பட்டிருப்பதை இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த உறவினர்கள் மருத்துவமனை நிர்வாகத்திடம் கேள்வி எழுப்பியுள்ளனர்.

Advertisment

ஆனால் இதற்கு மருத்துவமனை நிர்வாகம் பொறுப்பேற்க மறுத்துவிட்டதால் உறவினர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மருத்துவமனை அஜாக்கிரதையால், உயிரிழந்த ஒருவரின் உடல் சிதைக்கப்பட்டிருப்பது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், இதனை அடுத்து குடும்ப உறவினர்கள் அளித்த புகாரின் பேரில் இந்தூர் மாவட்ட நிர்வாகம் மாஜிஸ்திரேட் அளவிலான விசாரணையைத் தொடங்கியுள்ளது.