வீடு தேடி வரும் ரேஷன் பொருட்கள் - புதிய திட்டத்தை தொடங்கி வைத்த ஆந்திர முதல்வர்!

jegan mohan

ரேஷன் பொருட்களைவீட்டுக்கேவந்து விநியோகம் செய்யும்திட்டத்தைஆந்திராவில், அம்மாநிலமுதல்வர் இன்று (21.01.2021) தொடங்கி வைத்துள்ளார். இந்தத் திட்டத்தின் மூலம் ரேஷன் பொருட்கள், ரேஷன் அட்டைதாரர்களின் வீட்டிற்கேவாகனங்களில் கொண்டு செல்லப்பட்டு விநியோகிக்கப்படும்.

இதற்காக 9,260 வாகனங்களை 539 கோடியில்ஆந்திரஅரசு வாங்கியுள்ளது. ரேஷன் பொருட்களை வீட்டிற்கே சென்றுவழங்குவதால், அரசுக்குஆண்டுக்கு830 கோடிகூடுதலாக செலவாகும்.

இந்தத் திட்டம் குறித்துபேசியுள்ள ஆந்திர முதல்வர்ஜெகன் மோகன், ரேஷன் பொருட்களைப் பெறுவதற்காக நீண்ட வரிசையில் காத்திருந்த வயதான மற்றும் மாற்றுத்திறனாளிகளின் நிலையைக் கண்டு உருகிவிட்டதாக தெரிவித்துள்ளார்.

Andhra jeganmohan reddy Ration card
இதையும் படியுங்கள்
Subscribe