Ratan Tata went on to convey simplicity!

Advertisment

பிரபல தொழிலதிபரும், டாடா குழுமத்தின் முன்னாள் தலைவருமான ரத்தன் டாடா மும்பையில் உள்ள தாஜ் ஹோட்டலுக்கு நானோ காரில் சென்றார்.

மகாராஷ்டிரா மாநிலம், மும்பையில் உள்ள தாஜ் ஹோட்டலுக்கு இந்தியாவின் பிரபல தொழிலதிபரும், டாடா குழுமத்தின் தலைவருமான 84 வயதான ரத்தன் டாடா, தனது நிர்வாக உதவியாளர் சாந்தனுடன் நானோ காரில் முன் இருக்கையில் அமர்ந்து தாஜ் ஹோட்டலுக்கு சென்றது நெட்டிசன்கள் மத்தியில் பேசும் பொருளானது.

முன்னதாக, ஒரு லட்சம் ரூபாய் மதிப்பில் இந்தியாவின் மிக மலிவு விலை காரான நானோவை கடந்த 2008- ஆம் ஆண்டு டாடா நிறுவனம் அறிமுகப்படுத்தியது. அனைத்து தரப்பு மக்களும் கார் வாங்கும் கனவை நானோ நிறைவேற்றி வந்தது. அதன் தேவை குறையத் தொடங்கியதால், கடந்த 2018- ஆம் ஆண்டு நானோ கார் தயாரிப்பதை டாடா நிறுவனம் கைவிட்டது.

Advertisment

ஆடம்பரமான சொகுசு கார்கள், பாதுகாப்பு இருந்த போதிலும் எளிமையை உணர்த்தும் வகையில் நானோ காரில் ரத்தன் டாடா சென்றிருக்கும் வீடியோ வைரலாகி வருகிறது.