ratan tata

Advertisment

இந்தியாவின் மிகப்பெரும் பணக்காரர்களில் ஒருவர் ரத்தன்டாடா. இவர் தனது சமூக பணிகளுக்காகவும் கொண்டாடப்பட்டு வருகிறார்.

இந்தநிலையில் தற்போது ரத்தன்டாடாவிற்கு, இந்தியாவின் மிக உயரிய விருதான ‘பாரத ரத்னா’ விருது வழங்க வேண்டும்எனகோரிக்கைஎழுந்துள்ளது. இந்தக் கோரிக்கையை அவரது அபிமானிகள் ட்விட்டர் வலைதளத்தில் எழுப்பி வருவதோடு, இதுதொடர்பாகஹாஷ்டேக் ஒன்றையும் பெரிய அளவில் ட்ரெண்ட்செய்தனர்.

இதையடுத்துரத்தன்டாடா, தனக்குபாரதரத்னாவழங்க வேண்டும்என்ற பிரச்சாரத்தை நிறுத்துமாறு, தனது அபிமானிகளுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Advertisment

இதுகுறித்து அவர் தனதுட்விட்டர் பக்கத்தில், "சமூக ஊடகங்களில் ஒரு பகுதியினர், விருது தொடர்பாக வெளிப்படுத்திய உணர்வுகளை மதிக்கிற அதேவேளையில், இதுபோன்ற பிரச்சாரங்கள் நிறுத்தப்பட வேண்டும் என்று தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்" எனக் கூறியுள்ளார். மேலும் அவர்,“இந்தியனாக இருப்பதற்கும், இந்தியாவின் வளர்ச்சிக்கும் செழிப்பிற்கும் பங்களிக்கமுயற்சி செய்வதற்கும், நான் என்னை அதிர்ஷ்டசாலியாக கருதுகிறேன்"எனவும்தெரிவித்துள்ளார்.