Rat incident ; youth arrested

Advertisment

இருசக்கர வாகனத்தை வேண்டுமென்றே ஏற்றி எலியை கொன்றவர் கைது செய்யப்பட்ட சம்பவம் உத்தரபிரதேசத்தில் நிகழ்ந்துள்ளது.

உத்திர பிரதேசம் மாநிலம் லக்னோவில் பிரியாணி கடைநடத்தி வருபவர்ஸைனுல். இவருடைய பிரியாணி கடை வாசலில் எலி ஒன்று வந்துள்ளது. அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த அவர் வேண்டுமென்றே வாகனத்தை ஏற்றிஎலியை கொன்றுள்ளார். தெரியாமல் இருசக்கர வாகனம் எலி மீது ஏறுவதுபோல் இல்லாமல் இரண்டு மூன்று முறை ஸைனுல் வாகனத்தின் சக்கரத்தை முன்னும் பின்னும் நகர்த்தி எலியை கொல்லும் அந்தசிசிடிவிகட்சி இணையத்தில் வைரலானது. சிசிடிவி காட்சிகள் வெளியான நிலையில் எலியை வேண்டுமென்றே வாகனம் ஏற்றி கொலை செய்ததாக அவரை போலீசார் கைது செய்துள்ளனர்.