
பெங்களூருவில் உள்ள பிரபல ஹோட்டல் ஒன்றில் வாடிக்கையாளர் சாப்பிட்டுக்கொண்டிருக்கும் போதுசீலிங்கில் இருந்து இறந்த எலி ஒன்று உணவு வைக்கப்பட்டிருந்த தட்டில் விழுந்த சம்பவம் குறித்து அந்த வாடிக்கையாளர் குற்றச்சாட்டு தெரிவித்துள்ளார்.
பெங்களூர் நகரில் IKEA நாக சந்திரா என்ற பிரபல உணவகம் ஒன்று செயல்பட்டு வருகிறது. இங்கு கடந்த ஜூலை 16 ஆம் தேதி சரண்யா ஷெட்டி என்ற வாடிக்கையாளர் உணவை ஆர்டர் செய்து சாப்பிடத்தயாராகி உள்ளார். அப்பொழுது ஆர்டர் செய்யப்பட்ட உணவு மேஜையில் வைக்கப்பட்ட நிலையில், திடீரென ஹோட்டலின் சீலிங் உடைந்து அதிலிருந்து எலி ஒன்று இறந்த நிலையில் உணவு வைக்கப்பட்டிருந்த தட்டில் விழுந்தது. இதனைப் படம் பிடித்த சரண்யா ஷெட்டி அதுதொடர்பான புகைப்படத்தை வெளியிட்டு டிவிட்டரில், 'இது தனக்கு நேர்ந்த மோசமான நிகழ்வு' எனப் பதிவிட்டுள்ளார்.
Follow Us