Advertisment

குடியரசுத் தலைவர் குடியிருப்பு வளாகத்தில் சடலம்

rashtrapathi bavan

புதுடெல்லி குடியரசுத் தலைவர் மாளிகை வளாகத்திலுள்ள குடியிருப்பு பகுதியில் குடியரசுத் தலைவரின் செயலகத்தில் பணியாற்றி வந்த ஊழியரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

Advertisment

குடியரசுத் தலைவர் மாளிகை அருகிலேயே பணியாளர்களுக்கு என்று குடியிருப்புகள் அமைந்திருக்கின்றன. அங்கு நான்காம் நிலை ஊழியராக பணியாற்றிவந்தவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. செயலகத்தில் பணியாற்றி வந்தஇவர்சில நாட்களாகவே உடல்நிலை சரியில்லாதவராக காணப்பட்டதாக கூறப்படுகிறது.

Advertisment

நேற்று குடியிருப்பு பகுதிகளில் வாழ்ந்து வந்தவர்கள் துர்நாற்றம் வீசுகிறது என்று சந்தேகித்து காவலர்களிடம் தகவல் தெரிவித்துள்ளனர். இதனைத்தொடர்ந்து காவலர்கள் வந்து அவ்வீட்டினுள் பார்க்கையில் உள்பக்கம் தாழிடப்பட்டிருந்தது. பிறகு உரிய அதிகாரிகளின் முன்னிலையில் கதவு உடைக்கப்பட்டு உள்ளே சென்று பார்த்ததில் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. அவர் இரண்டு அல்லது இறந்துமூன்று நாட்கள் இருக்கலாம் என்று சொல்லப்படுகிறது. அவரது குடும்பத்தினர்கள் எல்லாம் வெளியூர் சென்றுள்ளனர். பின்னர், உடனடியாக உடல் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது. இந்த மரணம் குறித்து காவலர்கள் விசாரணை நடத்தி வருவதாக தெரிவித்தனர்.

Ramnath Govind President
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe