Advertisment

ராஷ்மிகா டீப் ஃபேக்; நான்கு பேர் சிக்கினர்

nn

Advertisment

அண்மையில் பிரபல நடிகை ராஷ்மிகா மந்தனா போல சித்தரிக்கப்பட்ட வீடியோ ஒன்று இணையங்களில் வைரல் ஆகியது. பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன் உள்ளிட்ட பல்வேறு தரப்பிலிருந்து சுட்டிக்காட்டியதைத் தொடர்ந்து அது AI தொழில்நுட்பத்தை பயன்படுத்தி உருவாக்கப்பட்ட டீப் ஃபேக் வீடியோ என்பது தெரியவந்தது.

அதனைத் தொடர்ந்து மத்திய அரசு இதுபோன்ற டீப் ஃபேக் வீடியோக்களை வெளியிடுவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவுறுத்தி இருந்தது. ஆனால் அதனைத் தொடர்ந்தும் பல்வேறு பிரபலங்களைப் போல டீப் ஃபேக் வீடியோக்கள் அவ்வப்போது வெளியாகி வைரலாகி வருகிறது.

சமீபத்தில் தொழிலதிபர் ரத்தன் டாடா முதலீடு செய்ய அழைப்பு விடுக்குமாறு பேசி உரையாற்றிய வீடியோ காட்சி ஒன்று வெளியாகி இருந்தது. அது டீப் ஃபேக் வீடியோ என தெரிய வந்தது. அந்த வீடியோவை யாரும் நம்ப வேண்டாம் தொழிலதிபர் ரத்தன் டாடா தெரிவித்திருந்தார்.

Advertisment

இந்தநிலையில் டீப் ஃபேக் வீடியோவை உருவாக்கியவர்களை கண்டுபிடிக்கும் முயற்சியில் டெல்லி போலீசார் தீவிரமாக விசாரணையில் இறங்கி உள்ளனர். இந்த விசாரணையில் தற்போது ரஷ்மிகா தொடர்பானடீப் ஃபேக் விடீயோக்களை இணையத்தில் பதிவேற்றம் செய்த நான்கு பேரை டெல்லி போலீசார் கண்டறிந்த நிலையில், அவர்களை கைது செய்ய தீவிரம் காட்டப்பட்டு வருவதாக டெல்லி போலீஸ் வட்டாரங்கள் தெரிவித்துள்ளது.

இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe