Advertisment

விஷம் கக்கும் யோகி ஆதித்யநாத்; உத்திரபிரதேச காங்கிரஸ்...

trgsg

Advertisment

உத்திரபிரதேசத்தில் நடந்த கூட்டத்தில் தொண்டர்கள் மத்தியில் மூத்த காங்கிரஸ் பிரமுகர் ரஷீத் ஆல்வி பேசுகையில், 'யோகி ஆதித்யநாத் மக்களுக்காக எந்தவித நல்ல வார்த்தைகளையும் கூறாமல் எப்போதும் விஷத்தையே கக்கி வருகிறார்' என கூறியுள்ளார். மேலும் பேசிய அவர், 'உடல் முழுவதும் விஷம் உள்ள ஜந்து கூட, எப்படி ஒரு மனிதன் தன்னைவிட விஷம் நிறைந்தவராக இருக்க முடியும் என யோசித்து யோகி முன் வந்து நிற்க பயப்படும். மேலும் யோகி மீது 13 கிரிமினல் வழக்குகள் உள்ளன, ஆனால் அதற்கு எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை' என கூறினார். மேலும் நாடாளுமன்ற தேர்தல் பற்றி பேசும் போது, வரும் தேர்தலில் உத்திரபிரதேசத்தில் காங்கிரஸ் கட்சி அனைத்து தொகுதிகளிலும் தனித்து நின்று போட்டியிட்டு வெற்றி பெரும் எனவும் தெரிவித்தார்.

yogi adithyanath uttarpradesh
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe