Advertisment

வன்புணர்வைத் தொடர்ந்து கொலைமிரட்டல்! - பா.ஜ.க. எம்.எல்.ஏ. மகன் அத்துமீறல் 

தன்மீதான வழக்கைத் திரும்பப் பெறக்கோரி பாஜக எம்.எல்.ஏ. மகன் கொலைமிரட்டல் விடுப்பதாக பாலியல் வன்புணர்வு செய்யப்பட்ட பெண் புகாரளித்துள்ளார்.

Advertisment

BJP

உத்தரப்பிரதேசம் மாநிலம் ஷாஜகான்பூர் தொகுதியைச் சேர்ந்த பா.ஜ.க. எம்.எல்.ஏ. ரோஷன்லால் வெர்மா. இவரது மகன் மனோஜ் வெர்மா மீது சமீபத்தில் இளம்பெண் ஒருவர் பாலியல் புகார் அளித்திருந்தார். ஏற்கெனவே, உ.பி. மாநிலத்தில் எம்.எல்.ஏ. ஒருவரால் சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இந்த செய்தி அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

இந்நிலையில், தன் மீதான வழக்கை திரும்பப்பெறக் கோரி பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு மனோஜ் வெர்மா கொலைமிரட்டல் விடுப்பதாக தகவல்கள் வெளியாகின. இதுகுறித்து பாதிக்கப்பட்ட பெண்ணின் வழக்கறிஞர், ‘அவரது வீட்டிற்குள் மனோஜ் வெர்மாவின் அடியாட்கள் அத்துமீறி நுழைந்து, காவல்நிலையத்தில் கொடுக்கப்பட்ட வழக்கினைத் திரும்பப்பெற வலியுறுத்தியுள்ளனர். மேலும், வழக்கைத் திரும்பப்பெற மறுத்தால் அந்தப் பெண்ணைக் கொலை செய்துவிடுவதாகவும் மிரட்டியுள்ளனர்’ என தெரிவித்துள்ளார்.

Advertisment

நீண்டகாலமாக தனக்கு நீதிகிடைக்க வேண்டும் என பாதிக்கப்பட்ட பெண் போராடி வருகிறார். இதுகுறித்து, பிரதமர் மோடி மற்றும் முதல்வர் ஆதித்யநாத் ஆகியோருக்கு அவர் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Rape uttarpradesh yogi
இதையும் படியுங்கள்
Subscribe