உன்னாவ் சிறுமி பாலியல் குற்றச்சாட்டு தொடர்பான செய்திகள் அடங்கியுள்ள நிலையில், தற்போது மீண்டும் பா.ஜ.க. எம்.எல்.ஏ. மீது இளம்பெண் ஒருவர் பாலியல் புகார் அளித்துள்ளார்.

Advertisment

kushagra

உத்தரப்பிரதேசம் மாநிலம் படவுன் சட்டமன்றத் தொகுதியில் எம்.எல்.ஏ.வாக இருப்பவர் பா.ஜ.க.வைச் சேர்ந்த குஷக்ரா சாகர். இவரது வீட்டில் பணிப்பெண்ணாக பணிபுரிந்த இளம்பெண், தன்னை கடந்த இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக பாலியல் வன்புணர்வு செய்ததாக காவல்நிலையத்தில் புகாரளித்துள்ளார்.

Advertisment

இதுகுறித்து அவர் பேசுகையில், குஷக்ரா சாகரின் வீட்டில் என் தாயார் பணிப்பெண்ணாக பணிபுரிந்து வந்தார். அவருக்கு உதவியாக நானும் அவ்வப்போது அங்கு செல்வேன். அப்போது, குஷக்ரா என்னைத் திருமணம் செய்துகொள்வதாகக் கூறி, கடந்த இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக பாலியல் வன்புணர்வு செய்துவந்தார். தற்போது எம்.எல்.ஏ. பதவி கிடைத்ததும் என்னை திருமணம் செய்துகொள்ள மறுக்கிறார். எனக்கு உரிய நீதி கிடைக்கவேண்டும். இல்லையென்றால், நான் தற்கொலை செய்துகொள்வேன். எனக்கு கொலைமிரட்டல்கள் விடுக்கப்படுகின்றன’ என தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.

முன்னதாக, உன்னாவ் பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுமியை பாலியல் வன்புணர்வு செய்த குற்றத்திற்காக, பா.ஜ.க. எம்.எல்.ஏ. குல்தீப் சிங் செங்கார் கைதுசெய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Advertisment