Advertisment

பெண் சீடருக்கு பாலியல் தொந்தரவு! - சர்ச்சையில் சிக்கிய இன்னொரு சாமியார்

என்னதான் பொதுசமூகத்தில் ஆன்மீகம் பொங்கினாலும், பெண்கள் விஷயத்தில் அத்துமீறி அதுதொடர்பான வழக்குகளில் சிக்குவதில் எந்த சாமியார்களும் சளைத்தவர்களில்லை. அந்த வகையில் டெல்லியைச் சேர்ந்த சாமியார் ஒருவர் தற்போது அந்த சர்ச்சையில் சிக்கியிருக்கிறார்.

Advertisment

Daati

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="5420060568"

data-ad-format="link">

Advertisment

டெல்லியில் உள்ள ஸ்ரீ ஷனிதாம் அறக்கட்டளையை நடத்திவருகிறார் சர்ச்சைக்குரிய சாமியார் தாட்டி மகராஜ். இவரிடம் சில ஆண்டுகளுக்கு முன்னர் ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் (தற்போது வயது 25) சீடராக சேர்ந்துள்ளார். கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்னதாக சாமியார் தாட்டி மகராஜ், பெண் சீடரை தனியறைக்கு அழைத்துச்சென்று பாலியல் வன்புணர்வு செய்துள்ளார். அதுமட்டுமின்றி, அங்குள்ள இரு ஆண் சீடர்களும் அந்தப் பெண்ணிடம் பாலியல் ரீதியில் அத்துமீறியுள்ளனர். இதற்கு அங்கிருந்து பெண் சீடர்களும் உடந்தையாக இருந்துள்ளனர்.

இதனால், மனமுடைந்த பெண் சீடர் அங்கிருந்து சொந்த ஊருக்கு தப்பியோடி, மன அழுத்தத்துடன் வாழ்ந்துவந்துள்ளார். தனக்கு இழைக்கப்பட்ட அநீதியை எண்ணி வருந்திய அந்த பெண், தற்போது டெல்லி மெஹ்ரூலியில் உள்ள காவல்நிலையத்தில் புகாரளித்துள்ளார். டெல்லி மகளிர் ஆணையர் ஸ்வாதி மலிவால், பாதிக்கப்பட்ட பெண் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு உரிய பாதுகாப்பு வழங்கவேண்டும் எனவும், குற்றம்சாட்டப்பட்ட சாமியார் உள்ளிட்டவர்கள் மீது சட்டரீதியிலான நடவடிக்கையை துரிதப்படுத்தவேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.

Gang raped Delhi Asaram Babu gurmeetsingh Daati maharj
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe