பத்மாவத் படத்தில் அலாவுதீன் கில்ஜியாக நடித்து இந்தியா முழுவதும் ரசிகர்களை சம்பாதித்தவர் பாலிவுட்டின் வளர்ந்து வரும் நட்சத்திரமானரன்வீர் சிங். இவர்பாலிவுட்டின் சிம்பு. எதற்கெடுத்தாலும் சர்ச்சையாகபேசுவது, சர்ச்சையான விளம்பரத்தில் நடிப்பதுஎன்று சர்ச்சை விரும்பியாக இருப்பவர்.
2016 ஆம் ஆண்டுஇவர்,பாபா ராம்தேவுடன் ஒரு மேடையில் ஆட்டம் போட்டார். அவர்கள் இருவரும் ஆட்டம் போட்டது சமூக வலைதளங்களில் வைரலானது. அதேபோல தற்போது, ஜக்கி வாசுதேவுடன் ரன்வீர் சிங் ஆட்டம் போட்டுள்ளார். இந்தவீடியோவை தனது ட்விட்டர் பக்கத்தில் 'ஹேப்பி டான்ஸ்' என்று பதிவிட்டுள்ளார். தற்போது இந்த வீடியோசமூகவலைதளத்தில் வைரலாகி வருகிறது.