Skip to main content

நடிகருடன் ஆட்டம் போட்ட ஜக்கி! 

Published on 23/07/2018 | Edited on 23/07/2018
ranveer

 

 

பத்மாவத் படத்தில் அலாவுதீன் கில்ஜியாக நடித்து இந்தியா முழுவதும் ரசிகர்களை சம்பாதித்தவர் பாலிவுட்டின் வளர்ந்து வரும் நட்சத்திரமான ரன்வீர் சிங். இவர் பாலிவுட்டின் சிம்பு. எதற்கெடுத்தாலும் சர்ச்சையாக பேசுவது, சர்ச்சையான விளம்பரத்தில் நடிப்பது என்று சர்ச்சை விரும்பியாக இருப்பவர்.

 

 

2016 ஆம் ஆண்டு இவர், பாபா ராம்தேவுடன் ஒரு மேடையில் ஆட்டம் போட்டார். அவர்கள் இருவரும் ஆட்டம் போட்டது சமூக வலைதளங்களில் வைரலானது. அதேபோல தற்போது, ஜக்கி வாசுதேவுடன் ரன்வீர் சிங் ஆட்டம் போட்டுள்ளார். இந்த வீடியோவை தனது ட்விட்டர் பக்கத்தில் 'ஹேப்பி டான்ஸ்' என்று பதிவிட்டுள்ளார். தற்போது இந்த வீடியோ சமூகவலைதளத்தில் வைரலாகி வருகிறது.
   

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“ஈஷாவில் இது முதல் முறையல்ல” - இளம்பெண் மரணம் குறித்து ஜோதிமணி எம்.பி

Published on 02/01/2023 | Edited on 02/01/2023

 

jothimani mp tweet about isha yoga centre

 

கோவையில் ஜக்கி வாசுதேவ் நடத்தி வரும் ஈஷா யோகா மையத்திற்கு பயிற்சிக்காகச் சென்ற தனது மனைவி சுபஸ்ரீயைக் காணவில்லை என திருப்பூரைச் சேர்ந்த அவரது கணவர் பழனிகுமார் போலீசில் புகார் அளித்திருந்தார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், தனிப்படை அமைத்து தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

 

இந்நிலையில், நேற்று ஈஷா யோகா மையத்தில் இருந்து காணாமல் போன சுபஸ்ரீ, கோவை செம்மேடு பகுதியில் விவசாயக் கிணற்றில் சடலமாக மீட்கப்பட்டார். அவரது கையில் இருந்த ஈஷா யோகா மையத்தின் மோதிரத்தை வைத்து மீட்கப்பட்ட உடல் சுபஸ்ரீ தான் என்று அவரது கணவர் பழனிகுமார் உறுதி செய்தார். அதன் பின் உடலைக் கைப்பற்றிய போலீசார் பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். 

 

இந்நிலையில், நாடாளுமன்ற உறுப்பினர் ஜோதிமணி தனது ட்விட்டர் பக்கத்தில், "கோவை ஈஷா யோகா மையத்திற்குப் பயிற்சிக்காக வந்த பெண் மர்மமான முறையில் மரணமடைந்திருப்பது அதிர்ச்சியளிக்கிறது. இம்மாதிரி சம்பவம் நடப்பது முதல் முறையல்ல. பெண்களின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு தமிழக அரசு முறையான விசாரணைக்கு உத்தரவிட வேண்டும். யாரும் சட்டத்திற்கு அப்பாற்பட்டவர்கள் அல்ல" எனக் குறிப்பிட்டுள்ளார். 

 

 

Next Story

ஈஷா யோகா மையத்திலிருந்து காணாமல் போன பெண் சடலமாக மீட்பு

Published on 01/01/2023 | Edited on 01/01/2023

 

Missing women at Isha Yoga Centre passed away

 

கோவையில் ஜக்கி வாசுதேவ் நடத்தி வரும் ஈஷா யோகா மையத்திற்கு பயிற்சிக்காகச் சென்ற தனது மனைவி சுபஸ்ரீ(34) காணவில்லை என திருப்பூரைச் சேர்ந்த அவரது கணவர் பழனிகுமார்(40) போலீசில் புகார் அளித்திருந்தார்.

 

அந்தப் புகாரில், “கடந்த டிசம்பர் மாதம் 11 ஆம் தேதி காலை 6 மணிக்கு எனது மனைவி ஒரு வார யோகா பயிற்சியில் கலந்து கொள்வதற்காக ஈஷா யோகா மையத்தில் விட்டுவிட்டுச் சென்றேன். அதன் பிறகு ஒரு வாரம் கழித்து சம்பவத்தன்று (18.12.2022) எனது மனைவியைக் கூட்டிச் செல்வதற்காக சென்றபோது, பயிற்சி முடிந்து அனைவரும் காலையிலேயே சென்றுவிட்டனர் என்று ஈஷா யோகா மையத்தில் இருந்தவர்கள் தெரிவித்தனர்.

 

இதனைத் தொடர்ந்து, அங்கிருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து பார்த்ததில், சுபஸ்ரீ சர்ப்ப வாசல் வழியாக ஒரு டாக்சியில் ஏறிச் செல்வது தெரியவந்தது. அதைத் தொடர்ந்து, ஒரு நம்பரில் இருந்து எனது செல்போனுக்கு ஒரு மிஸ்ட் கால் வந்திருந்தது. பிறகு அந்த நம்பருக்கு திரும்ப அழைத்தேன். அதில் பேசிய நபர், ‘ஒரு பெண் தனது கணவருக்குப் பேச வேண்டும் என்று கூறி என்னுடைய செல்போனை வாங்கி போன் செய்தார், ஆனால், அழைப்பை எடுக்காததால், செல்போனை என்னிடம் கொடுத்துவிட்டுச் சென்றுவிட்டார்’ எனத் தெரிவித்தார். எனது மனைவி எங்குச் சென்றார் என்று தெரியவில்லை. அக்கம்பக்கத்தில் எல்லாம் தேடிப்பார்த்தும் கிடைக்காததால், எனது மனைவி சுபஸ்ரீயை கண்டுபிடித்துத் தருமாறு கேட்டுக்கொள்கிறேன்.” என்று தெரிவித்திருந்தார். 

 

இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், தனிப்படை அமைத்து தீவிர விசாரணை மேற்கொண்டனர். இந்நிலையில், ஈஷா யோகா மையத்தில் இருந்து காணாமல் போன சுபஸ்ரீ கோவை செம்மேடு பகுதியில் விவசாயக் கிணற்றில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். அவரது கையில் இருந்த ஈஷா யோகா மையத்தின் மோதிரத்தை வைத்து மீட்கப்பட்ட உடல் சுபஸ்ரீ தான் என்று அவரது கணவர் பழனிகுமார் உறுதி செய்தார். அதன் பின் உடலைக் கைப்பற்றிய போலீசார் பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.