ranjan gogoi tested positive for corona

Advertisment

உச்சநீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய்க்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது என பரவிய தகவல் உண்மையில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது..

உலகம் முழுவதும் கோடிக்கணக்கானவர்களைப் பாதித்துள்ள கரோனா வைரஸ் இந்தியாவில், சமீபகாலமாகத் தீவிரமாகப் பரவி வருகிறது. இன்றைய நிலவரப்படி இந்தியாவில் இந்த வைரஸால் 19 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். 39,000க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில், ராமர் கோயில் உள்ளிட்ட பல முக்கிய வழக்குகளில் தீர்ப்பு வழங்கிய உச்சநீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய்க்கு கரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது என தகவல்கள் பரவின. இந்நிலையில் இந்த தகவல்களை ரஞ்சன் கோகாய் மறுத்துள்ளார்.