மக்களவை தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வரும் நிலையில் ஆந்திரா உள்ளிட்ட 4 மாநிலங்களில் சட்டமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கையும் நடந்து வருகிறது. மக்களவை தேர்தல் வாக்கு எண்ணிக்கையின் தற்போதைய நிலைப்படி பாஜக கூட்டணி 340 தொகுதிகளிலும், காங்கிரஸ் கூட்டணி 90 தொகுதிகளிலும் முன்னிலையில் உள்ளது.

Advertisment

ranil wickremesinghe wishes modi

பாஜக மட்டுமே தனிப்பெரும்பான்மைக்கு தேவையான தொகுதிகளில் முன்னிலையில் உள்ளது. எனவே இதனை நாடு முழுவதும் உள்ள பாஜக தொண்டர்கள் கொண்டாடும் விதமாக பட்டாசுகள் வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில் இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்கே மோடிக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.