Rangasamy warns police

Advertisment

நேஷனல் ஹெரால்டு பத்திரிகை விவகாரத்தில் சட்டவிரோத பணப்பரிமாற்றம் குறித்து அமலாக்கத்துறையினர் விசாரணை நடத்தி வரும் நிலையில் இது தொடர்பாக விசாரிக்க ராகுல்காந்திக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியிருந்தது. இந்த சம்மனையடுத்து பேரணியாக அமலாக்கத்துறை அலுவலகத்திற்கு சென்று விசாரணைக்கு ராகுல்காந்தி ஆஜரானார். அதனைத் தொடர்ந்து ராகுல் காந்திக்கு சம்மன் அனுப்பிய அமலாக்கத்துறையைக் கண்டித்து நாடு முழுவதும் காங்கிரஸ் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். சென்னையிலும், புதுச்சேரியில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் போலீசாருக்கும் காங்கிரஸ் கட்சியினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

இந்நிலையில் புதுச்சேரியில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட புதுச்சேரி முன்னாள் முதல்வர் நாராயணசாமிக்கும் போலீசாருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அப்பொழுது 'தொலச்சி கட்டிடுவேன்' என போலீசாருக்கு எச்சரிக்கை விடும்படி நாராயணசாமி பேசினார். அந்த வீடியோக்கள் இணையத்தில் வைரலாக ஷேர் செய்யப்பட்டு வருகிறது.