நடந்து முடிந்த 17வது மக்களவை தேர்தல் முடிவுகளில் அதிக இடம் பெற்ற பாஜக பெரும்பான்மையுடன் ஆட்சி அமைத்துள்ளது. பிரதமர் மோடி நேற்று மாலை பதவியேற்று கொண்டார். இதில் பிஹாரின் மாநிலக் கட்சியான எல்ஜேபியின் நிறுவனராக ராம்விலாஸ் பாஸ்வானும் மந்திரிசபையில் இடம்பெற்றுள்ளார்.

Advertisment

ramvilas paswan as cabinet minister

1989-ல் ஜனதா தளம் கட்சியின் எம்பியான பாஸ்வான், பிரதமர் வி.பி.சிங் அமைச்சரவையில் தொழிலாளர் நலத்துறையின் இணை அமைச்சராக பொறுப்பேற்றார். அதன்பின் காங்கிரஸ் மற்றும் பாஜக என அரசுகள் மாறினாலும் இவருக்கு மட்டும் அமைச்சர் பதவி தரப்பட்டுக்கொண்டே இருந்தது. ஒவ்வொரு தேர்தலுக்கும் யார் வெற்றி பெறுவார்கள் என்பதை சரியாக கணிக்கும் இவர், அவர்களுடன் கூட்டணி வைத்து எப்படியும் ஒரு மந்திரி பதவியை வாங்கி விடுவார்.

1996-ல் ரயில்வே துறையின் இணை அமைச்சர் பதவி கிடைத்தது. பிறகு 1998ல் பாஸ்வானுக்கு மத்திய தொலைத் தொடர்புத் துறையின் இணை அமைச்சர் பதவி கிடைத்தது. 2000 ஆவது ஆண்டு தனி கட்சி ஆரம்பித்த பாஸ்வான் மீண்டும் தனது ராஜதந்திரத்தை பயன்படுத்தி கூட்டணிகளை அமைத்து தொடர்ந்து மத்திய அரசில் இடம்பெற்று வருகிறார்.

Advertisment

2009 ஆம் ஆண்டு தேர்தலில் தோல்வியடைந்த அவர், அந்த ஒரு மந்திரிசபையில் மட்டும் இடம்பெறவில்லை. அதனை தவிர 1989 முதல் பாஜக, காங்கிரஸ் என எந்த கட்சி வந்தாலும் அதில் இவருக்கு எப்போதும் ஒரு மந்திரி பதவியை பிடித்துவிடுவார். இந்த தேர்தலிலும் இவரது கட்சி 6 தொகுதிகளில் போட்டியிட்டு அனைத்து தொகுதிகளில் வெற்றி பெற்றது. இதனையடுத்து இந்த முறையும் இவருக்கு மந்திரி சபையில் இடம் தரப்பட்டுள்ளது.