Advertisment

ராமோஜி பிலிம் சிட்டி நிறுவனர் காலமானார்!

Ramoji Film City Founder Ramoji Rao Passes Away

ராமோஜி பிலிம் சிட்டி நிறுவனரும், ஈநாடு பத்திரிகை நிறுவனருமான ராமோஜி ராவ் (வயது 87) காலமானார். உடல்நலக் குறைவால் ஐதராபாத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் ராமோஜி ராவ் சிகிச்சை பலனின்றி இன்று (08.06.2024) அதிகாலை 03:45 மணிக்கு உயிரிழந்ததாகத் தகவல் வெளியாகியுள்ளது.

Advertisment

மேலும் ராமோஜி ராவின் மறைவுக்குத் தெலுங்கானா பாஜக தலைவரும், அக்கட்சியின் எம்.பி.யுமான ஜி. கிஷன் ரெட்டி இரங்கல் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் எக்ஸ் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “ஊடகத்துறையின் முன்னோடியாகவும், தகவல் துறையில் பல சீர்திருத்தங்கள் மற்றும் விழுமியங்களுக்கு முன்னோடியாகவும் இருந்த ராமோஜி ராவ் இன்று மறைந்தார் என்பதை அறிந்து மிகுந்த வருத்தமடைகிறேன். அர்ப்பணிப்புடனும், ஒழுக்கத்துடனும், விடாமுயற்சியுடனும் பணியாற்றியவர் ஆவார்.

Advertisment

ராமோஜி ராவின் மறைவு தெலுங்கு ஊடகத்துறைக்கும், தொலைக்காட்சித் துறைக்கும், தெலுங்கு மாநிலங்களுக்கும் மிகப்பெரிய இழப்பாகும். ராமோஜி ராவின் ஆன்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திப்பதுடன், அவரது குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

hyderabad telangana
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe