திமுக தலைவர் கலைஞரின் உடல்நிலையில் நலிவு ஏற்பட்டுள்ளதை அடுத்து அனைத்துக்கட்சி தலைவர்களும் நேரில் வந்து நலம் விசாரித்து செல்கின்றனர்.
இந்நிலையில், திமுக தலைவர் கலைஞரின் நலம் குறித்து இந்திய குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் நலம் விசாரித்ததாக ட்விட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் பதிவிட்டுள்ள ட்விட்டர் பதிவில் '' திமுக தலைவர் கலைஞர் உடல்நலம் குறித்து அவரது குடும்ப உறுப்பினர்களிடம் தொலைபேசியில்நலம் விசாரித்தேன். அவர் பூர்ண உடல்நலம் பெற்று பொதுவாழ்விற்கு திரும்பவரவேண்டும்.விரைவில் அவர் உடல்நலம் பெறவேண்டும் என வேண்டிக்கொள்கிறேன்'' எனவும் பதிவிட்டுள்ளார்.