பாஜக கூட்டணியில் அங்கம் வகித்தவரும் இந்திய குடியரசுக் கட்சியின் தலைவரும், மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை இணை அமைச்சருமார்ராம்தாஸ் அத்வாலே, இந்தியாவில்கரோனாதொற்று பரவ ஆரம்பித்த நேரத்தில், கரோனவைவிரட்ட, மக்களைகோகரோனா, கரோனா கோ என கோஷமிடுமாறு கூறியிருந்தார். இது சமூகவலைதளங்களில் கேளிக்குள்ளானது.
இந்தநிலையில், இவர் புதியவகை கரோனவைதடுப்பதற்கு, ' நோ கரோனாகரோனாநோ' என கோஷமிடுமாறு தற்போது கூறியுள்ளார். இதுகுறித்து அவர், "முன்னதாக நான் ‘கோ கரோனா, கொரோனா கோ’ என்ற கோஷத்தைக் கொடுத்தேன். இப்போது கரோனா போய்க்கொண்டிருக்கிறது. தற்போது இந்த புதிய வகைபுதிய கரோனா வைரஸிற்கு, ‘நோ கரோனா, கரோனாநோ ’ என்ற கோஷத்தை தருகிறேன் எனகூறியுள்ளார்.
மேலும், "பிப்ரவரி மாதம் கோவிட் -19 நிலைமை இந்தியாவில் மோசமாக இல்லாதபோது நான் அந்தகோஷத்தை கொடுத்தேன்.அந்த நேரத்தில், இதனால் கரோனாபோய்விடுமா எனமக்கள் சொல்லிக்கொண்டிருந்தார்கள். தற்போதுஇந்த கோஷத்தை உலகம் முழுவதும் காண்கிறோம்" எனவும்ராம்தாஸ்அத்வாலேகூறியுள்ளார்.