ADVERTISEMENT

பாடப் புத்தகத்தில் ராமாயணம், மகாபாரதம்-என்.சி.இ.ஆர்.டி பரிந்துரை

10:07 PM Nov 21, 2023 | kalaimohan

ADVERTISEMENT

ADVERTISEMENT

பள்ளி சமூக அறிவியல் பாடப் புத்தகத்தில் ராமாயணம், மகாபாரதம் ஆகியவற்றை சேர்க்க என்.சி.இ.ஆர்.டி பரிந்துரை அளித்துள்ளது.

தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சிலான என்.சி.இ.ஆர்.டி அமைப்பின் ஏழு பேர் கொண்ட உயர்மட்ட குழு பள்ளி பாடங்களில் சமூக அறிவியல் புத்தகத்தில் ராமாயணம், மகாபாரதம் ஆகியவற்ற சேர்க்க பரிந்துரை வழங்கி உள்ளது. அதேபோல் அரசியலமைப்பின் முகவுரை வாசகங்களை வகுப்பறையின் சுவர்களில் எழுதவும் இந்த குழு பரிந்துரை அளித்துள்ளது. உத்திரப் பிரதேச மாநிலம் அயோத்தியில் அடுத்த வருடம் ஜனவரி 22ஆம் தேதி ராமர் கோவில் திறக்கப்பட உள்ளது. இந்த நிலையில் இந்த பரிந்துரை வழங்கியிருப்பது அரசியல் நோக்கர்களால் உற்று கவனிக்கப்பட்டு வருகிறது. 'சங்ககால இந்தியா' என்ற பிரிவில் ராமாயணம், அயோத்தி, வனவாசம் உள்ளிட்டவை தொடர்பான பாடங்கள் இடம்பெறும் வகையாக இந்த பரிந்துரைகள் கொடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த பரிந்துரையை மத்திய அரசு ஏற்கும் பட்சத்தில் ராமாயணம், மகாபாரதம் ஆகியவை பாடப்புத்தகத்தில் இடம்பெற வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT