p

ராமர் கோயில் கட்டுவது தொடர்பான அறக்கட்டளை குறித்து பிரதமர் மோடி இன்று நாடாளுமன்றத்தில் அறிவித்தார். அவர், ‘’ராமர் கோயில் அமைப்பதற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. ராமர் கோயில் கட்டுவது தொடர்பாக அரசு உறுதியான நடவடிக்கை எடுத்துள்ளது. ராம ஜென்ம பூமி அறக்கட்டளையை மத்திய அரசு அமைத்துள்ளது. அறக்கட்டளை சுதந்திரமாக முடிவுகளை மேற்கொள்ளும். அயோத்தியில் 67.7 ஏக்கர் நிலப்பரப்பில் ராமர் கோயில் கட்டப்படும். சன்னி வக்ஃபு வாரியத்திற்கு 5 ஏக்கர் நிலத்தை உபி அரசு ஒதுக்கியுள்ளது. அயோத்தியில் மிக பிரம்மாண்டமாக ராமருக்கு கோயில் கட்டப்படும்’’என்று கூறினார்.

Advertisment

அயோத்தி வழக்கில் உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பின்படி, ராமர் கோவில் அமைக்க, அறங்காவலர் குழு அல்லது வேறு ஏதேனும் பொருத்தமான அமைப்பு அமைப்பதற்கு தேவையான ஏற்பாடுகளுடன் ஒரு திட்டத்தை வகுக்க மத்திய அரசுக்கு உத்தரவிடப்பட்டது. இதையடுத்து மத்திய அரசு எடுத்துள்ள நடவடிக்கை குறித்து இன்று நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி அறிவித்தார்.