Advertisment

"அவர் ராகுல் காந்தி அல்ல"... ராகுல் காந்தியை கடுமையாக விமர்சித்த ராமச்சந்திர குஹா...

பிரபல வரலாற்று ஆய்வாளரும், எழுத்தாளருமான ராமச்சந்திர குஹா கேரளாவில் நடைபெற்ற கேரள இலக்கிய விழாவில் ராகுல் காந்தியை கடுமையாக விமர்சித்துள்ளார்.

Advertisment

ramachandra guha criticized rahul gandhi

கேரளாவின் கோழிக்கோட்டில் நடந்த கேரள இலக்கிய விழாவின் இரண்டாம் நாளான நேற்று பேசிய ராமச்சந்திர குஹா, "ராகுல் காந்திக்கு எதிராக தனிப்பட்ட முறையில் எனக்கு எதுவும் இல்லை. அவர் ஒரு ஒழுக்கமான, மிகவும் நல்ல நடத்தை உடையவர். ஆனால் இளம் இந்தியா ஐந்தாம் தலைமுறை அரசியல்வாதியை விரும்பவில்லை. கேரளா மக்கள் நாட்டிற்கு எவ்வளவோ நன்மை செய்திருகிறீர்கள். ஆனால் ராகுல் காந்தியை எம்.பி யாக தேர்ந்தெடுத்தது மோசமான ஒரு செயல்.

Advertisment

2024 ஆம் ஆண்டில் ராகுல் காந்தியை மீண்டும் தேர்ந்தெடுத்து நீங்கள் தவறு செய்தால், அது நரேந்திர மோடிக்கு தான் நன்மையாக அமையும்.நரேந்திர மோடியிடம் மிகப்பெரிய நல்ல விஷயம் என்னவென்றால் அவர் ராகுல் காந்தி அல்ல. அவர் சுயமாக இந்த நிலைக்கு வந்துள்ளார். 15 ஆண்டுகளாக ஒரு மாநிலத்தில் ஆட்சி நடத்திய நிர்வாக அனுபவம் உள்ளது. அவர் நம்பமுடியாத அளவிற்கு கடினமாக உழைக்கிறார், அவர் தனது விடுமுறையை செலவிட ஐரோப்பா செல்வதில்லை" என தெரிவித்துள்ளார்.

modi Rahul gandhi ramachandra guha
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe