Advertisment

ராமர் கோயில் கட்டுவதற்காக இதுவரை வந்துள்ள நிதி எவ்வளவு?- அறக்கட்டளை வெளியிட்ட தகவல்...

ram mandir donations detail

Advertisment

அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதற்காக இதுவரை எவ்வளவு நிதி சேர்ந்துள்ளது என்பது குறித்து தீர்த்த ஷேத்திர அறக்கட்டளை தகவல் வெளியிட்டுள்ளது.

அயோத்தியில் ராமர் கோயில் கட்டுமான பணிகள் இன்று பூமி பூஜையுடன் தொடங்கும் சூழலில், இதற்காகபொதுமக்களிடமிருந்து இதுவரை எவ்வளவு நிதி வந்துள்ளது என்பது குறித்த தகவலை தீர்த்த ஷேத்திர அறக்கட்டளையின் பொருளாளர் சுவாமி கோவிந்த் தேவ் கிரி கூறுகையில், "அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதற்காக ஆகஸ்ட் 4-ம் தேதி வரை மொத்தமாக 30 கோடி ரூபாய் நிதி வந்துள்ளது. பூமி பூஜை நடைபெறும் நாளில் 11 கோடி ரூபாய் வரை நிதி வசூலாகும் என எதிர்பார்க்கிறோம். இது தவிர வெளிநாடுகளிலிருந்து 7 கோடி ரூபாய் பணம் வரவுள்ளது. ஆனால் எங்கள் அறக்கட்டளைக்கு,வெளிநாடுகளிலிருந்து பணம் பெறுவதற்கான அனுமதி இன்னும் அதிகாரபூர்வமாக வழங்கப்படாததால் அதனை நிறுத்தி வைத்துள்ளோம்" எனத் தெரிவித்துள்ளார்.

Ram mandir Ayodhya
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe