Advertisment

"நாட்டை பாதுகாப்பதுதான் முக்கியம்" தற்காலிகமாக நிறுத்தப்பட்ட அயோத்தி ராமர் கோயில் கட்டுமானம்...

ram mandir construction work stopped

எல்லைப்பகுதியில் இந்தியா, சீனா இடையே நிலவிவரும் பதட்டமான சூழலைக் கருத்தில் கொண்டு அயோத்தியில் ராமர் கோயில் கட்டுமானப் பணி தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.

Advertisment

லடாக் பகுதியில் இந்திய, சீன ராணுவ வீரர்களுக்கு இடையே நடைபெற்ற மோதலில் இந்திய வீரர்கள் 20 பேர் உயிரிழந்துள்ளசூழலில், இந்தியா முழுவதும் சீனாவுக்கு எதிரான குரல்கள் எழுந்து வருகின்றன. இந்நிலையில் இந்த பதட்டமான நிலையை கருத்தில் கொண்டு அயோத்தி ராமர் கோயில் கட்டுமான பணிகளை தற்காலிகமாக நிறுத்திவைப்பதாகக் கோயில் கட்டுமான பணிகளை மேற்கொள்ளும் அறக்கட்டளை அறிவித்துள்ளது. இதுகுறித்த அறக்கட்டளையின் அறிக்கையில், "இந்திய-சீன எல்லையில் தற்போது நிலைமை மோசமடைந்துள்ளது. நாட்டைப் பாதுகாப்பதுதான் தற்போது முக்கியம். எனவே, கோயிலின் கட்டுமானப் பணிகள் தற்போதைக்கு நிறுத்தப்படுவதோடு, மீண்டும் பணிகள் தொடங்குவது குறித்து நாட்டின் நிலைமைக்கு ஏற்ப முடிவு எடுக்கப்பட்டு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும்" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisment

china LADAK Ram mandir
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe