ramar

குஜராத் மாநிலத்தில் சர்தார் வல்லபாய் படேலுக்கு உலகிலேயே உயர்ந்த சிலை ஒன்று நிறுவப்பட்டு, கடந்த 31ஆம் தேதி திறந்து வைக்கப்பட்டது. இந்த பிரமாண்ட சிலையை பிரதமர் மோடி திறந்து வைத்தார். இதை போன்றே மற்றொரு பிரமாண்ட சிலை மராத்திய அரசர் சிவாகிக்கு அரபிக்கடலில் நிறுவப்பட்டு வருகிறது. இதனை தொடர்ந்து அயோத்தியில் பிரமாண்ட ராமர் சிலையை முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் அமைக்க முடிவு செய்துள்ளார்.

Advertisment

இந்நிலையில், இதுகுறித்து அயோத்தி மேயர் ரிஷகேஷ் உபாத்யா கூறுகையில், “அயோத்தியில் சரயு நதிக்கரையில் 151 மீட்டர் உயரத்தில் இந்த ராமர் சிலை அமைக்கப்பட உள்ளது. இதற்கான அறிவிப்பு தீபாவளி அன்று வெளியிடப்படும்” என்றார்.

Advertisment