harivansh

மாநிலங்களவை துணைத் தலைவர் தேர்தல் போட்டியில் தேசிய ஜனநாயக கூட்டணியைச் சேர்ந்த ஹரிவன்ஷ் வெற்றிபெற்றார்.

Advertisment

மாநிலங்களவையின் துணைத்தலைவராக இருந்த ஜெ,பி. குரியன் பதவிக்காலம் முடிவடைந்ததை அடுத்து, இன்று அப்பதவிக்கான தேர்தல் நடைபெற்றது. இதில் பாரதீய ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியின் சார்பில் ஐக்கிய ஜனதா தளத்தின் ஹரிவன்ஷும், காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் சார்பில் பி.கே. ஹரிபிரசாதும் போட்டியிடுகின்றனர்.

Advertisment

தற்போது இந்த தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பாக போட்டியிட்டஹரிவன்ஷ் 125 வாக்குகள் பெற்று வெற்றிபெற்றார். இவரை எதிர்த்து போட்டியிட்ட ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் பி.கே. ஹரிபிரசாத் 98 வாக்குகள் பெற்றிருந்தார்.

வெற்றிபெற்ற ஹரிவன்ஷுக்கு பிரதமர்மோடியும், எதிர்க்கட்சி மூத்த அமைச்சர் குலாம் நபி ஆசாத் வாழ்த்து தெரிவித்தனர்.

Advertisment