
இந்தியநாடாளுமன்றத்தில், மன்ற நிகழ்வுகளை ஒளிபரப்பஇரண்டு தொலைக்காட்சிகள் செயல்பட்டு வந்தன. இதில்லோக்சபா டிவி, மக்களவை நிகழ்வுகளையும், ராஜ்யசபாடிவி, மாநிலங்களவைநிகழ்வுகளையும் ஒளிபரப்பிவந்தன. இந்த இரண்டு தொலைக்காட்சிகளையும் ஒன்றிணைக்க, குடியரசு துணைத் தலைவரும்மாநிலங்களவை சபாநாயகருமான வெங்கையா நாயுடுவும், மக்களவைசபாநாயகர்ஓம் பிர்லாவும் இணைந்து குழு ஒன்றை அமைத்தனர். அந்தக் குழு, இரண்டு தொலைக்காட்சிகளையும் இணைப்பதுகுறித்து ஆராய்ந்துவந்தது.
இந்நிலையில் இன்று (02.03.2021) இரு தொலைக்காட்சிகளும் இணைக்கப்பட்டுள்ளன. இணைக்கப்பட்ட இந்த தொலைக்காட்சிக்கு ‘சன்சாத் டி.வி’ (SANSAD TV) எனப் பெயரிடப்பட்டுள்ளது. ஓய்வுபெற்ற ஐ.ஏ,எஸ்அதிகாரியான ரவி கபூர், இந்த தொலைக்காட்சியின் தலைமைச் செயல் அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார். ஒரு வருட காலம் அல்லது மறு உத்தரவு வரும்வரைஅவர் சன்சாத்டிவியின்தலைமைச் செயல் அதிகாரியாக செயல்படுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
Follow Us