மக்களவையில் ரஃபேல் விமானம் வாங்கியதில் முறைகேடு நடந்திருக்கிறது என்று காங்கிரஸ் உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டனர். இதனால் அவை முடக்கப்பட்டது. இந்த விவகாரம் தொடர்பாக நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரணை தேவை என்று மக்களவையில் காங்கிரஸ் எம்பிகள் வலியுறுத்தினார்கள்.
காங்கிரஸ் உறுப்பினர்கல் எழுப்பிய குரலுக்கு பதிலளித்த உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங், எதிர்கட்சிகள் தொடர்ந்து பொய் பிரச்சாரம் செய்கிறது. எதிர் கட்சியினருக்கு என்னுடைய கண்டனத்தை தெரிவிக்கிறேன். ரஃபேல் விவகாரம் குறித்து ஏற்கனவே நாடாளுமன்றத்தில் விவாதிக்கப்பட்டு விட்டது. ஆதலால் நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரணைக்கு உத்தரவிட முடியாது என்றார்.
இதனையடுத்து காங்கிரஸ் உறுப்பினர்கள் அவையைவிட்டு வெளிநடப்பு செய்தனர்.