Skip to main content

“போர் உருவானால் களத்தில் இறங்க நாட்டு மக்கள் தயாராக இருக்க வேண்டும்” - மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர்

Published on 27/07/2023 | Edited on 27/07/2023

 

rajnath singh said In case of war people country should be ready to stand

 

இந்தியா - பாகிஸ்தான் இடையே கடந்த 1999 ஆம் ஆண்டு நடந்த கார்கில் போரில் வெற்றி பெற்றதன் 24 வது நினைவு தினம் நேற்று அனுசரிக்கப்பட்டது. அதன் அடிப்படையில், கார்கில் போர் வெற்றி தினக் கொண்டாட்டம் நாடு முழுவதும்  நேற்று கொண்டாடப்பட்டது. லடாக்கில் உள்ள போர் நினைவுச் சின்னம் மீது ஹெலிகாப்டர் மூலம் மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது. இந்நிலையில் லடாக்கில் உள்ள போர் நினைவுச் சின்னம் அமைந்துள்ள இடத்திற்கு நேரில் சென்று மத்தியப் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் மரியாதை செலுத்தினார்.

 

அதனைத் தொடர்ந்து பேசிய மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், “கார்கில் போர் இந்தியா மீது திணிக்கப்பட்டது. அப்போது, பாகிஸ்தானுடனான பிரச்சனைகளைத் தீர்க்க இந்தியா முயன்றது. ஆனால் பாகிஸ்தானோ முதுகில் குத்திவிட்டது. அதன் பிறகு இரு நாடுகளுக்கு இடையே நிகழ்ந்த இந்த கார்கில் போர் 1999 ஆம் ஆண்டு ஜூலை 26ஆம் தேதி முடிவடைந்தது. அதன் பின்னர், கார்கில் போரில் நாம் வெற்றி பெற்ற நிலையில் நமது ராணுவம் எல்லை கட்டுப்பாட்டுக் கோட்டைத் தாண்டிச் செல்லவில்லை. இந்தியா அமைதியை விரும்புவதால் தான் கார்கில் யுத்தத்தில் வென்ற போது எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டை நமது ராணுவம் தாண்டிச் செல்லவில்லை. இந்திய நலன்களுக்கு ஊறுவிளைவிக்கப்பட்டால் எந்த நிலையிலும் நமது ராணுவப் படைகள் பின்வாங்காது என்று கார்கில் போரின் மூலம் பாகிஸ்தான் மட்டுமல்லாமல் உலக நாடுகளுக்கும் உணர்த்தி விட்டோம்.

 

நாட்டின் கண்ணியத்தைப் பாதுகாக்க எந்த எல்லைக்கும் செல்வோம். அதற்காக எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டைத் தாண்ட வேண்டிய அவசியம் ஏற்பட்டால் அந்த எல்லையைக் கடந்து சென்று தாக்குதல் நடத்துவோம். இந்தியாவுக்கு எதிரான போர் சூழல் ஏற்படும் போதெல்லாம் நமது ராணுவ வீரர்களுக்கு நாட்டு மக்கள் எப்போதுமே உறுதுணையாக ஆதரவு அளித்து வந்துள்ளனர். ஆனால், அது மறைமுகமான ஒத்துழைப்பாகவே இருந்திருக்கிறது. இனி அந்த நிலை மாற வேண்டும். எதிர்காலத்தில், போர் உருவானால் பாதுகாப்புப் படையினருக்கு நேரடியாக உதவுவதற்கு போர்க்களத்தில் இறங்க நாட்டு மக்கள் தயாராக இருக்க வேண்டும்.

 

அதுமட்டுமின்றி கார்கில் போரில் ஈடுபட்ட ராணுவ வீரர்கள் பலர் புதிதாய் திருமணம் செய்து கொண்டவர்கள். ஆனால், அவர்கள் திருமணத்தைப் பற்றியோ, குடும்பத்தின் ஒரே வருவாய் ஆதாரமாக இருப்பதை எண்ணியோ கவலைப்படாமல் போர்க்களத்தில் துணிந்து போராடினார்கள். அவர்கள் தங்கள் உயிரைப் பற்றிக்கூடச் சிந்திக்கவில்லை. நாட்டுக்காக தங்களின் உயிரைத் தியாகம் செய்த நமது படை வீரர்களுக்கு நான் தலை வணங்குகிறேன். அவர்களின் தியாகம் வீண் போகவில்லை. அவர்களின் பங்களிப்பு பல தலைமுறைகளுக்கு உத்வேகமாக இருக்கும்” என்று கூறினார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“காங்கிரஸ் டைனோசரை போன்று இன்னும் சில ஆண்டுகளில் அழிந்துவிடும்” - ராஜ்நாத் சிங்

Published on 12/04/2024 | Edited on 12/04/2024
Congress will be extinct like a dinosaur in a few years says Rajnath Singh
கோப்புப்படம்

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடுமுழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கும் வாக்குப்பதிவு ஜூன் 1 ஆம் தேதி வரை நாடுமுழுவதும் 7 கட்டங்களாக நடைபெறவுள்ளது. பின்பு பதிவான வாக்குகள் ஜூன் 4 எண்ணப்பட்டு அன்றைய தினமே முடிவுகள் வெளியிடப்படவுள்ளது.

ஆட்சியைத் தக்க வைக்கும் வகையில் பாஜகவும், இழந்த ஆட்சியை எப்படியாவது பிடிக்க வேண்டும் என்று காக்கிரஸ் கட்சியும் தீவிரமாக செயல்பட்டு வருகிறது. மாநில கட்சிகளை சேர்த்து பாஜக என்.டி.ஏ கூட்டணியையும், எதிர்கட்சிகளை ஒருங்கிணைத்து காங்கிரஸ் இந்தியா கூட்டணியையும் அமைத்து வேட்பாளர்கள் அறிவிப்பு, பிரச்சாரம் என்று சுற்றி சுழன்று வாக்கு சேகரித்து வருகின்றனர். பிரச்சார பொதுக்கூட்டத்தில் பாஜக காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகளையும், காங்கிரஸ் கட்சி பாஜக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகிறது.

இந்த நிலையில், டைனோசர் போன்று காங்கிரஸ் கட்சியும் இன்னும் சில காலங்களில் அழிந்துவிடும் என்று பாதுகாப்புதுறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார். உத்தராகாண்டில் கவுச்சார் நகரில் நடைபெற்ற பிரச்சார பொதுக்கூட்டத்தில் பேசிய அவர், காங்கிரஸ் கட்சியில் இருந்து ஒருவர் பின் ஒருவராக விலகி பாஜகவில் இணைந்து வருகின்றனர். காங்கிரஸ் தலைவர்கள் தினமும் சண்டைபோட்டு கொள்கின்றனர். டைனோசர் போன்று இன்னும் சில ஆண்டுகளில் காங்கிரஸ் கட்சி அழிந்துவிடுமோ என்ற அச்சம் இருக்கிறது. இன்னும் சில ஆண்டுகளில் காங்கிரஸ் என்ற பெயரை கூறினால், குழந்தைகள் யார் அவர்கள்? என்று கேட்பார்கள் எனக் கடுமையாக சாடியிருக்கிறார்.

Next Story

எங்களுக்கு மாநகராட்சி வேண்டாம்! 100 நாள் வேலை தான் வேண்டும்! - போராட்டத்தில் மக்கள்!

Published on 18/03/2024 | Edited on 18/03/2024
Pudukottai people are protesting that we don't want a corporation

கடந்த சில நாட்களுக்கு முன்பு புதுக்கோட்டையைச் சுற்றியுள்ள 11 ஊராட்சிகளை இணைத்து புதுக்கோட்டை நகராட்சி மாநகராட்சியாக தரம் உயர்த்துவதாகத் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவித்தார். இந்த அறிவிப்பு வருவதற்குச் சில மாதங்களுக்கு முன்பே ‘வேண்டாம் மாநகராட்சி’ என்ற பெயரில் பல்வேறு அரசியல் கட்சி பிரமுகர்களை இணைத்து போராட்டக்குழு தொடங்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், முதலமைச்சரின் அறிவிப்பையடுத்து போராட்டம் வேகமெடுக்கத் தொடங்கியுள்ளது. முதற்கட்டமாக திருக்கட்டளை, திருமலைராயசமுத்திரம் கிராம மக்கள் ஒன்று கூடி திங்கள் கிழமை, வேண்டாம் மாநகராட்சி என்று முழக்கமிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். கிராம ஊராட்சியில் இருக்கும் எங்களுக்கு 100 நாள்  வேலை உறுதித் திட்டத்தில் ஆண்டுக்கு 100 நாட்கள் வேலை கிடைக்கிறது. இதுமட்டுமின்றி பல்வேறு சலுகைகளும் கிடைக்கிறது. மேலும் சொத்துவரி, குடிநீர் வரி உள்பட பல்வேறு வரிகள் உயர்த்திக் கட்ட வேண்டும். குப்பை வரி வாங்குவாங்க ஆனா குப்பை அள்ளமாட்டாங்க. வேலையே இல்லாம இந்த வரியெல்லாம் எப்படி கட்ட முடியும். அதனால் வேண்டாம் மாநகராட்சி என்று கோரிக்கை முழக்கமிட்டனர்.

அதே நேரத்தில் மாநகராட்சியில் 100 நாள் வேலை கிடைக்காது. ஆனால் எங்களை சம்மதிக்க வைக்க வேலை தருவதாக சொல்வாங்க. அப்புறம் தரமாட்டாங்க என்கின்றனர் போராட்டத்தில் இருந்த பெண்கள். இது முதற்கட்ட போராட்டம் தான். தேர்தலுக்கு முன்பே இன்னும் பலகட்ட போராட்டங்களை 11 ஊராட்சி மக்களும் ஒன்று சேர்ந்து எடுப்பார்கள். இல்லை என்றால் தேர்தலை புறக்கணித்து ஆளும் திமுகவுக்கு நெருக்கடி கொடுக்கவும் திட்டமிட்டுள்ளனர் என்கின்றனர்.