ஜம்மு காஷ்மீர் மாநிலம் புல்வமா மாவட்டத்தில் பாதுகாப்பு படையினர் சென்ற வாகனத்தின் மீது ஜெய்ஷ் இ முகம்மது இயக்க தீவிரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதலில் 44 வீரர்கள் வீர மரணம் அடைந்தனர். இன்னும் பல வீரர்கள் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில் உயிரிழந்த வீரர்களுக்கு மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் நேரில் அஞ்சலி செலுத்தினார். வீரர்கள் வைக்கப்பட்ட பெட்டியை மற்ற வீரர்களுடன் இணைந்து வாகனம் வரை அவரும் தூக்கி கொண்டு சென்றார். வீரர்கள் உள்ள பெட்டிகள் வண்டிகளில் ஏற்றப்படும் போது அங்குள்ள வீரர்கள் கண்ணீர் விட்டு அழுதனர்.
ராணுவ வீரர் உடலை தோளில் சுமந்து சென்ற ராஜ்நாத் சிங்; கண்ணீர் விட்டு அழுத வீரர்கள்...
Advertisment