/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/bk.jpg)
லடாக் பகுதியில் இந்திய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் சீன ராணுவத்தினர் முகாமிட்டு வருவதால் இரு நாடுகளுக்கும் இடையே சமீப காலமாகப் பதட்டமான சூழல் நிலவிவருகிறது.
இந்நிலையில் நேற்றிரவு லடாக் எல்லையில் இந்திய ராணுவத்தினருக்கு, சீன ராணுவத்தினருக்கு மோதல் நடந்துள்ளதாகத் தகவல் வெளியானது. இதில் இந்திய ராணுவத்தைச் சேர்ந்த ஒரு அதிகாரி இரண்டு வீரர்கள் உட்பட மூவர் உயிரிழந்துள்ளனர். நேற்றிரவு ஏற்பட்ட இந்த மோதலால் இந்திய சீன எல்லையில் பதட்டம் மேலும் அதிகரித்துள்ள சூழலில், இருதரப்பில் இருந்தும் அதிகாரிகள் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில், இந்த தாக்குதலில் சீன வீரர்கள் 5 பேர் பலியானதாக சீன ஊடகம் தகவல் வெளியிட்டுள்ளது. இந்நிலையில் பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் இதுதொடர்பாக ராணுவ தளபதி மற்றும் அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார். இதனை தொடர்ந்து பிரதமர் மோடியுடன் அவர் ஆலோசனை மேற்கொண்டார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)