Skip to main content

எல்லைக் கட்டுப்பாட்டு பகுதியில் மத்திய அமைச்சர் ராஜ்நாத்சிங்...

Published on 18/07/2020 | Edited on 18/07/2020

 

rajnath singh in leh

 

லடாக் எல்லைக் கட்டுப்பாட்டு பகுதியில் மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் ஆய்வு மேற்கொண்டார். 

 

லடாக் பகுதியில் இந்திய, சீன ராணுவத்தினருக்கு இடையேயான மோதலுக்கு பின்னர் இருதரப்பு உறவில் விரிசல்  விழுந்துள்ள நிலையில், இரு நாடுகளுக்கும் இடையே ராணுவ அதிகாரிகள் மட்டத்திலான அமைதி பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருகின்றன.இந்நிலையில் இந்திய எல்லைப்பகுதிகளில் கடந்த இரண்டு நாட்களாக ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறார், மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங். நேற்று லடாக்கில் உள்ள லே நகருக்கு சென்ற அவர் லே பகுதிக்கு மேல் இருக்கும் ஸ்டக்னா, லுகுங் பகுதிகளை ஆய்வு செய்தார்.

 

பயணத்தின் இரண்டாம் நாளான இன்று ஸ்ரீநகருக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட ராஜ்நாத்சிங், குப்வாரா மாவட்டத்தில் உள்ள எல்லைக் கட்டுப்பாட்டு பகுதியில் ஆய்வு செய்ததோடு, அங்கு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த ராணுவ வீரர்களுடனும் கலந்துரையாடினார். பரபரப்பான சூழலுக்கு மத்தியில் கடந்த மூன்றாம் தேதி பிரதமர் மோடி லடாக் பகுதிக்கு பயணம் மேற்கொண்டது குறிப்பிடத்தக்கது. 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“காங்கிரஸ் டைனோசரை போன்று இன்னும் சில ஆண்டுகளில் அழிந்துவிடும்” - ராஜ்நாத் சிங்

Published on 12/04/2024 | Edited on 12/04/2024
Congress will be extinct like a dinosaur in a few years says Rajnath Singh
கோப்புப்படம்

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடுமுழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கும் வாக்குப்பதிவு ஜூன் 1 ஆம் தேதி வரை நாடுமுழுவதும் 7 கட்டங்களாக நடைபெறவுள்ளது. பின்பு பதிவான வாக்குகள் ஜூன் 4 எண்ணப்பட்டு அன்றைய தினமே முடிவுகள் வெளியிடப்படவுள்ளது.

ஆட்சியைத் தக்க வைக்கும் வகையில் பாஜகவும், இழந்த ஆட்சியை எப்படியாவது பிடிக்க வேண்டும் என்று காக்கிரஸ் கட்சியும் தீவிரமாக செயல்பட்டு வருகிறது. மாநில கட்சிகளை சேர்த்து பாஜக என்.டி.ஏ கூட்டணியையும், எதிர்கட்சிகளை ஒருங்கிணைத்து காங்கிரஸ் இந்தியா கூட்டணியையும் அமைத்து வேட்பாளர்கள் அறிவிப்பு, பிரச்சாரம் என்று சுற்றி சுழன்று வாக்கு சேகரித்து வருகின்றனர். பிரச்சார பொதுக்கூட்டத்தில் பாஜக காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகளையும், காங்கிரஸ் கட்சி பாஜக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகிறது.

இந்த நிலையில், டைனோசர் போன்று காங்கிரஸ் கட்சியும் இன்னும் சில காலங்களில் அழிந்துவிடும் என்று பாதுகாப்புதுறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார். உத்தராகாண்டில் கவுச்சார் நகரில் நடைபெற்ற பிரச்சார பொதுக்கூட்டத்தில் பேசிய அவர், காங்கிரஸ் கட்சியில் இருந்து ஒருவர் பின் ஒருவராக விலகி பாஜகவில் இணைந்து வருகின்றனர். காங்கிரஸ் தலைவர்கள் தினமும் சண்டைபோட்டு கொள்கின்றனர். டைனோசர் போன்று இன்னும் சில ஆண்டுகளில் காங்கிரஸ் கட்சி அழிந்துவிடுமோ என்ற அச்சம் இருக்கிறது. இன்னும் சில ஆண்டுகளில் காங்கிரஸ் என்ற பெயரை கூறினால், குழந்தைகள் யார் அவர்கள்? என்று கேட்பார்கள் எனக் கடுமையாக சாடியிருக்கிறார்.

Next Story

போராட்டக்காரர்களுடன் பிறந்தநாள் கொண்டாடிய பிரகாஷ் ராஜ்

Published on 26/03/2024 | Edited on 26/03/2024
prakash raj celebrate his birthday with sonam wangchuk protest

பிரகாஷ் ராஜ் கடைசியாக மகேஷ் பாபுவின் குண்டூர் காரம் படத்தில் நடித்திருந்தார். தமிழில் பொன்னியின் செல்வன் 2 படத்தில் நடித்திருந்தார். இப்போது தனுஷின் ராயன், அல்லு அர்ஜுனின் புஷ்பா 2, ஜூனியர் என்.டி.ஆரின் தேவரா உள்ளிட்ட சில தமிழ் மற்றும் தெலுங்கு படங்களை கைவசம் வைத்துள்ளார். 

தமிழ், மலையாலம், கன்னடம், இந்தி என ஏகப்பட்ட மொழிகளில் நடித்துள்ள பிரகாஷ் ராஜ் 5 முறை தேசிய விருது வென்றுள்ளார். நடிப்பதை தாண்டி இயக்குநராகவும் தயாரிப்பாளராகவும் வலம் வருகிறார். திரைப்படங்களைத் தாண்டி அரசியல் ரீதியாக தனது கருத்துகளை தொடர்ச்சியாக சமூக வலைத்தளங்களில் பதிவு செய்து வருகிறார். மேலும் பா.ஜ.க-வை தீவிரமாக எதிர்த்து வருகிறார்.  

prakash raj celebrate his birthday with sonam wangchuk protest

இன்று தனது பிறந்தநாளைக் கொண்டாடி வருகிறார் பிரகாஷ் ராஜ். அவருக்கு திரைப் பிரபலங்கள், அரசியல் தலைவர்கள் உள்ளிட்ட ரசிகர்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் லடாக்கிற்கு மாநில அந்தஸ்து வழங்கக் கோரியும் அரசியல் சாசனத்தில் ஆறாவது அட்டவணையை அமல்படுத்தக்கோரியும் பொறியியலாளர் மற்றும் சமூக ஆர்வலர் சோனம் வாங்சுக் நடத்தி வரும் போராட்டத்தில் கலந்து கொண்டு தனது பிறந்தநாளைக் கொண்டாடியுள்ளதாக பிரகாஷ் ராஜ் தெரிவித்துள்ளார். 

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “நமக்காக, நம் நாட்டிற்காக, நமது சுற்றுச்சூழலுக்காக, நமது எதிர்காலத்திற்காக போராடும் லடாக் மக்களுடன் துணை நிற்போம். சோனம் வாங்சுக்கின் போராட்டத்தில் கலந்துகொண்டு எனது பிறந்தநாளைக் கொண்டாடினேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.