மத்திய அரசின்புதியவேளாண் சட்டங்களுக்கு எதிரானபோராட்டங்கள் 35வது நாளாக தொடர்ந்து வருகிறது. இன்று விவசாயிகளுக்கும் மத்திய அரசுக்கும்இடையே 6 ஆம் காட்ட பேச்சுவார்த்தை நடைபெறவுள்ளது.
இந்நிலையில் மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், விவசாயிகளை நக்சல்கள் என்றும் காலிஸ்தானி என்றும் குற்றம்சாட்டக்கூடாது என்றும், விவசாயிகள் போராட்டத்தால் பிரதமர் மோடி வேதனைப்படுவதாகவும் கூறியுள்ளார்.
இதுகுறித்து ராஜ்நாத் சிங், "போராடும்விவசாயிகள் நக்சல்கள், காலிஸ்தானிகள் என யாரும்குற்றம் சுமத்தகூடாது. விவசாயிகள் மீது நமதுஆழமான மரியாதையை வெளிப்படுத்துகிறோம். அவர்கள் நமக்குஉணவு அளிப்பவர்கள்.விவசாயிகள் மீது உணர்ச்சியற்றவர்களாக இருக்கிறோமா என்ற கேள்விக்கேஇடமில்லை. நமது விவசாயிகள் போராட்டங்களை நடத்துகிறார்கள். இதனால்நான் மட்டும் வேதனைப்படவில்லை, பிரதமர் நரேந்திர மோடியும் வேதனையடைகிறார்.குறைந்தபட்ச ஆதார விலை தொடரும் என்று அரசு திரும்ப திரும்ப கூறிவருகிறது. ஜனநாயகத்தில் தலைவர்கள் வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என்றால் மக்கள் அவர்களை தண்டிப்பார்கள் எனகூறியுள்ளார்.
மேலும் இந்தியா - சீனாஎல்லை பிரச்சனை குறித்துபேசியுள்ள ராஜ்நாத் சிங், இந்தியா எல்லையில் படைகளைகுறைக்கப்போவதில்லை எனகூறியுள்ளார். இதுகுறித்து அவர்,இந்தியா மற்றும் சீனாஇடையேயான பேச்சுவார்த்தைகள் நடந்து கொண்டிருக்கின்றன, ஆனால் இதுவரை எந்த வெற்றியும் எட்டப்படவில்லை. இராணுவ மட்டத்தில் அடுத்த கட்ட பேச்சுவார்த்தைகள் எப்போது வேண்டுமானாலும் நடைபெறும். அதுவரை தற்போதைய நிலையேதொடரும். இந்தியா எல்லையில் படைகளைகுறைக்காது. பேச்சுவார்த்தையில் நேர்மறையான முடிவு வரவேண்டும் என்பதேநமதுஎதிர்பார்ப்பு.